Monday, April 3, 2017

அழிப்பதற்கு கூடுவதை விட ஆக்குவதற்கு கூடலாமே.

நமஸ்காரம். நான் சொல்லப்போவது பைத்தியக்காரத்தனம், நடக்காத ஒன்று என்ற விமர்சனங்கள் வரலாம். ஆனாலும் என்னுடைய எண்ணத்தைக் கூறுகின்றேன்.
அதுவும் மெரினா கடற்கரையில் தானாகவே திரண்ட இளைஞர்களின் எழுச்சியால் இந்த யோசனை.
திரு காமராஜர் காலத்திற்குப் பிறகு எந்த ஒரு அணையும் வந்ததில்லை என்று எல்லோரும் தனித்தனியாக புலம்புகின்றோம். நமது வீட்டிற்குத் தண்ணீர் இல்லையென்றால்bore போடுகின்றோம். ஒரு ஊருக்குத் தேவையென்றால் water tank கட்டுகின்றோம். நமது மாவட்டங்களின் தேவைக்காக நாமே ஏன் ஒரு அணை கட்டக்கூடாது? நமது மக்களில் பலர் பொறியியல் படித்தள்ளனர்.பலர் design engineeringபடித்துள்ளனர். உடல் உழைப்பைத் தர பலர் இருக்கின்றனர். தினசரி வருபவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் உணவு வழங்க பல ஓட்டல்கள் உள்ளன.எல்லோருக்கும் எக்காலத்திற்க்கும் அவசியமான இந்த அணையை எங்கே முதலில் கட்டலாம் என்று அனைத்து ஜாதி,இன,மத பெருமக்கள் ஒன்றாக கலந்து ஆரம்பிக்கலாம். இதற்குத் தேவையான பணத்தை எப்படி திரட்டுவது என்றும் சரியாக செலவு செய்வது என்பது பற்றி பல சட்ட மேதைகள், கணக்காளர்கள் முடிவு செய்யட்டும். ஊர் கூடினால் தேர் மட்டுமல்ல அணையும் கட்டமுடியும் என்று காட்டலாம். இதற்கு பணம் மட்டுமல்ல நல்ல மனமும் உள்ளவர்கள் பங்கு மிகமுக்கியம்.
மடங்கள்,அரசியல்வாதிகள்,கம்பனி முதலாளிகள் மற்றும் NRI இதற்கு பண உதவி மற்றும் பொருளதவி செய்யலாம்.
இது நடக்காத ஒன்று அல்ல. நாட்டை ப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள் ஒன்றானல் இது நடந்து விடும். அழிப்பதற்கு கூடுவதை விட ஆக்குவதற்கு கூடலாமே.
கனவு நிஜமாக பிரார்த்தனை செய்கின்றேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...