அழகாக வார்த்தைகளைக் கோர்த்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, உண்மையையும் குழி தோண்டிப் புதைத்து, மக்களையும் ஏமாற்றி, பிரச்சனையையும் திசைதிருப்பும் வல்லமை பெற்றவர் நமது பாரத நாட்டின் பிரமதராக வாய்த்துள்ள மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் ஆனாலும், காமன்வெல்த் போட்டிகளில் நடந்த மெகா ஊழல் ஆனாலும், அதில் தான் நேரடியாக சம்மந்தப்படவில்லை என்பதையும், அதற்கு அந்தத் துறை அமைச்சர் மட்டுமே பொறுப்பானவர் என்பதையும் நிரூபித்ததில் அவருடைய இந்த வார்த்தை சாமர்த்தியம் அகில இந்திய அளவில் ஊடகவியலாளர்கள் அனைவரையும் அபாரமாக குழப்பியது. அதிலிருந்து தெளிந்து அவர்கள் அடுத்த கேள்வி கேட்பதற்குள் அவர் அளித்துக்கொண்டிருந்த பேட்டி முடிந்திருக்கும்.
அப்படிப்பட்ட தனது அபார சாமர்த்தியத்தை மீ்ண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள். நாடாளுமன்ற வளாகத்திலுள்ள தனது அலுவலகத்திற்கு வந்து தன்னை சந்தித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் வைகோ, முல்லைப் பெரியாறு, இலங்கைத் தமிழினப் பிரச்சனைகள் குறித்து பேசி ஒரு மனுவை அளித்தார். தான் அளித்த மனுவில் இடம்பெற்ற விடயங்களை வைகோ விளக்கியபோது, அவரிடம் பிரதமர் கேட்ட கேள்விகள்தான் அவருடைய வார்த்தைச் சாதுரியத்தை அபாரமாக பிரதிபலித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்குமா?

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனைத் தொடர்பாக தான் மனுவில் குறிப்பிட்டுள்ள விடயங்களைப் பேசிய வைகோ, “மத்திய அரசின் நீர்வள ஆணையம் நியமித்த வல்லுநர் குழுக்கள், முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து, அணை வலுவாகவே இருப்பதாக அறிக்கை கொடுத்து உள்ளன. இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம், அணை வலுவாக இருப்பதாகவும், நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்றும், தமிழகத்திற்குச் சாதகமாக ஏற்கனவே தீர்ப்பளித்துவிட்டது” என்று கூறியுள்ளார்.
அப்போது குறுக்கிட்ட பிரதமர் மன்மோகன் சிங், “அணை கட்டி நூறு ஆண்டுகள் ஆகிறதே?” என்று வினா எழுப்பியதாக வைகோ குறிப்பிடுகிறார். அதற்கு, “ஆயிரம் ஆண்டுகள் வலுவாக இருக்கும். அந்த அளவிற்கு அணையை வலுப்படுத்துவற்கான பணிகளை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப் படி தமிழக அரசு செய்து முடித்துள்ளது” என்று பதிலளித்துள்ளார்.

தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையிலான முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில், “அணை பலமாக உள்ளது, முதல் கட்டமாக நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தி, பிறகு படிப்படியாக உயர்த்தலாம்” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததே, அதற்குத் தெரியாதா அணை நூறு ஆண்டுகள் பழமையானது என்று!
நூறு ஆண்டுகள் ஆகிவிட்டால் அணை பலவீனமாகிவிடும் என்று பிரதமர் கருதுகிறாரா? அப்படியானால், இந்த நாட்டில் உள்ள பழைய அணைகளை இடித்துத்தள்ளிவிட்டு புதிய அணைகள் கட்ட வேண்டு்ம் என்கிறாரா? பிரதமர் ஏதோ விவரத்தை அறிந்துகொள்வதற்காக கேட்டதாகக் கொள்ள முடியாது. ஏனெனில் முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பாக ஓராண்டுக்கு முன்னர்தான் இரு மாநில முதல்வர்களையும் நேரடியாக அழைத்துப் பேசியவர் மன்மோகன் சிங். அப்படியிருக்க நூறு ஆண்டுகள் ஆகிவிட்ட அணை எப்படி பலமாக இருக்கும் என்கிற தொனியில் உள்ள அவரது கேள்வி, கேளர அரசையும், அரசியல்வாதிகளையும் தட்டி எழுப்புவது போல் அல்லவா உள்ளது?
இது பிரச்சனைக்குத் தீர்வு காணும் பேச்சா? இல்லை, இரு மாநிலங்களையும் ஒன்றுக்கு எதிராக ஒன்றை மூட்டிவிடும் பேச்சா? அணை பலவீனமான இருக்கிறது என்று உண்மைக்கு மாறாக கேரள அரசு அவிழ்த்துவிடும் பொய்யை நம்புகிறவர் போலல்வா பிரதமர் பேசுகிறார்! கேரள அரசியல்வாதிகளின் பேச்சை விட பிரதமரின் கேள்விதான் அணைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போல் தெரிகிறதே?
‘சிக்கல் நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது, தீர்ப்பு வரட்டும், பிறகு பார்க்கலாம்’ என்றல்லவா பிரதமர் கூறியிருக்க வேண்டும்? பொறுப்புள்ள பிரதமராக இருந்தால் கூறியிருப்பார்.
இலங்கை பிரச்சனையில் திசை திருப்பல்
பிரதமருக்கு தான் அளித்த மனுவில் இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றியும் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ள வைகோ, “இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசோடு செய்து கொண்டுள்ள அனைத்துப் பொருளாதார ஒப்பந்தங்களையும் இந்தியா ரத்து செய்ய வேண்டும்” என்றும், “ஐ.நா.மனித உரிமைகள் மன்றத்தில், இலங்கை அரசுக்கு ஆதரவாக, தமிழர்களுக்கு எதிராகவே இந்தியா செயல்பட்டு இருக்கின்றது. இதைச் சொல்வதற்காக என் மீது வருத்தப்படக் கூடாது. இனி உலக அரங்கில் இலங்கை அரசுக்குச் சாதகமாக இந்திய அரசு செயல்படக் கூடாது” என்றும் வைகோ கூறியுள்ளார்.
அதற்குப் பிரதமர், “இலங்கைக்கு நாம் உதவவில்லை என்றால், அங்கே சீனா கால் ஊன்றி விடும்” என்று கூறியுள்ளார். என்ன பதில் இது!
சீனா கால் ஊன்றிவிடும் என்பதற்காக அந்நாட்டை தாஜா செய்து பக்கத்தில் வைத்துக்கொள்ளவே நமது நாடு உதவி செய்கிறதா? இது சரியான அணுகுமுறைதானா? இப்படிப்பட்ட அணுமுறைதான் ஒரு அண்டை நாட்டுடன் பலமான அயலுறவை ஏற்படுத்துமா? இதுதான் இராஜதந்திரமா? என்ன முட்டாள்தனம்?

சீனா அங்கே கால் ஊன்றி விடும் என்பதற்காகத்தான் ஈழத் தமிழினத்தின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று முத்திரையிட்டு, ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொல்ல உதவியதா இந்திய அரசு? இப்படி கேட்பதற்குக் காரணம், அப்போதும் இதே பதிலைத்தான் பிரணாப் முகர்ஜி கூறினார். “நாம் உதவவில்லை என்றால் சீனா உதவிடும்” என்று கூறினார்.
பூர்வீகக் குடிகளான தமிழர்களைக் கொன்று குவிக்க உதவினீர்களே, அதன் மூலம் இந்திய அரசு சாதித்தது என்ன? தமிழின இனப் படுகொலைக்கு உதவினீர்கள், பிறகு கடனில் சிக்கி தத்தளித்துக்கொண்டிருந்த இலங்கை அரசைக் காக்க, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.6 பில்லியன் டாலர்கள் கடன் பெற்றுத் தந்தீர்கள், காமன்வெல்த் போட்டிகளின் முடிவு விழாவிற்கு ராஜபக்சவை சிறப்பு விருந்தினராக அழைத்து பெருமைப்படுத்தினீர்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது, எந்த நாட்டுடன் இலங்கை அரசு நட்பு கொண்டுள்ளது?
எந்த நாட்டுடன் அந்த நாடு நட்புக் கொள்ளக் கூடாது என்று கருதினீர்களோ, அந்த சீன நாட்டைத்தான் “என்றென்றும் எங்களின் நட்பு நாடு” என்று பீஜிங் சென்று பிரகடனம் செய்தாரே மகிந்த ராஜபக்ச! என்ன ஆனது உனது உதவி?
சீனா அங்கே கால் பதிக்காமல் தடுத்து விட்டீர்களா? ஹம்பன்தோட்டாவில் நீங்கள் துணைத் தூதரகம் திறந்தீர்கள், சீனா அங்கே பெரிய துறைமுகத்தை கட்டிக்கொடுத்து இந்துமகா சமுத்திரத்தில் தனது ஆளுமையை நிலைநாட்டிவிட்டது.
மாத்தளத்தில் இருந்து கொழும்பு வரை இரயில் பாதை அமைத்துக் கொடுத்தீர்கள், பலாலி விமான தளத்தை புதுப்புத்துக் கொடுத்தீர்கள், வல்வெட்டித்துறை துறைமுகத்தை நவீனப்படுத்திக் கொடுத்தீர்கள், குறைந்த வட்டியில் கடனை பல்லாயிரம் மில்லியன் அள்ளி வீசினீர்கள். ஆனால், இன்று வரை இந்தியாவோடு விரிவான வர்த்தக கூட்டாணமை ஒப்பந்தம் (சீபா) செய்துகொள்ள இலங்கை அரசு முன்வரவில்லை, சம்பூர் அனல் மின் நிலையம் அமைக்கும் பணிக்கு ஒப்புதல் தரவில்லை. மாறாக, இலங்கையின் தென் பகுதியில் மிகப் பெரிய ஆயுதக் குவியலையே ஏற்படுத்திவிட்டது சீனா!
இதையெல்லாம் அறிந்திருந்தும் நமது மாண்புமிகு பிரதமர் கூறுகிறார், அங்கே சீனா கால் பதித்துவிடும் என்று! கால் பதித்தோடு நிற்கவில்லை, காலை நீட்டிப் படுத்தே விட்டான், நீங்கள்தான், தமிழனைக் கொன்று குவிக்க உதவி விட்டு, வெளியில் நின்றுகொண்டு கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.
சீனாவின் காலை அல்ல, அவனுடைய கால் நகத்தைக் கூட இலங்கையில் இருந்து உங்கால் அசைக்க முடியாது, ஏனென்றால், இந்திய நாட்டை நேசித்த தமிழனைக் கொல்ல உதவினீர்கள் அல்லவா, அதில் இருந்து உங்கள் யோக்கியதையை சிங்களன் ஒவ்வொருவனும் புரிந்துகொண்டுள்ளான். எனவே உங்களால் காலையும் பதிக்க முடியாது, தலை கீழாகவும் நடக்க முடியாது.
இதையெல்லாம் தெரியாமல் பேசுகிறார் பிரதமர் என்றும் நாம் ஏமாந்துவிடக் கூடாது, எல்லாம் தெரிந்தவர்தான், ராஜபக்சவை மிரட்டியவர்தான், ஆனால், எதுவும் நடக்கவில்லை என்பதுதான் உண்மை.
எனவே, வார்த்தைகளால் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியை கைவிட்டுவிட்டு, தமிழன் மீதான வெறுப்பை கைகழுவி விட்டு, பிரச்சனையை நேர்மையுடன் அணுகுங்கள் பிரதமரே. இல்லையெனில், வரலாற்றில் மிக அசிங்கமான பக்கங்களுக்கு சொந்தமாகிவிடுவீர்கள்.

No comments:
Post a Comment