Saturday, October 4, 2014

ஜெயலலிதாவுக்கு நிகழ்வது – அப்பட்டமான பழிவாங்கல்….

செல்வி ஜெயலலிதா அவர்கள் 18 ஆண்டுகளுக்கு முன்
குற்றப்பத்திரிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் குற்றங்களில்
ஈடுபட்டாரா இல்லையா என்பது பற்றி அல்ல .
அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் சந்தேகத்திற்கிடமின்றி
நிரூபிக்கப்பட்டு விட்டனவா இல்லையா என்பது பற்றியும் அல்ல
இந்த விஷயங்களை எல்லாம் தாண்டி -
அவர் மீது தண்டனை விதிக்கப்பட்ட விதமும்,
அதன் பிறகு அவருக்கு நடக்கும் நிகழ்வுகளும் -
பற்றியே இங்கு விவாதம்.
சுப்ரமணிய குன்ஹா என்கிற ஒருமித்த சக்தி ஒன்றைப்பற்றி,
நேற்றைய செய்தி ஒன்றின் மூலம் தெரிய வருகிறது.
ஏதோ ஒரு கோர்ட்டில் பதிவாளராக ( கவனிக்கவும் -
நீதிபதியாக அல்ல பதிவாளராக ) பணி செய்துகொண்டிருந்தவர்
10 மாதங்களுக்கு முன்னர் இந்த வழக்கை ‘எப்படியாவது’ விரைவில்
முடிக்க வேண்டும் என்கிற உத்திரவுடன் (?) அனுப்பப்படுகிறார்.
அதன் பிறகு வழக்கு புதிய வேகத்துடன்,
வித்தியாசமான அணுகுமுறையுடன் முன்னேறுகிறது – முடிகிறது….!!!
பொதுவாக, கிரிமினல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்படுவது
குறித்து – சுப்ரீம் கோர்ட் சில நடைமுறைகளை அறிவித்திருக்கிறது.
வழக்கு விசாரணகள் முடிந்த பிறகு, ஒரு நாள் குறித்து,
குற்றம் சாட்டப்பட்டவரை நேரடியாக கோர்ட்டுக்கு வரவழைத்து -
அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்கள் எவ்வித சந்தேகத்திற்கும்
இடமின்றி நிரூபிக்கப்பட்டு விட்டன என்றும், அந்த கோர்ட்
அவரை “குற்றவாளி” என்று தீர்மானிப்பதாகவும் அறிவித்து விட்டு,
தீர்ப்பு கூற மற்றொரு நாளைக் குறித்து, தனக்கு விதிக்கப்படும்
தண்டனை பற்றி குற்றவாளி ஏதேனும் கூற விரும்பினால், கூறலாம் -
கோர்ட் அதை அனுமதிக்கிறது என்று கூற வேண்டும்.
பின்னர் குற்றவாளி தண்டனை பற்றிய தனது வேண்டுகோளை
முன்வைக்கலாம். அதன் பின்னர் அடுத்த நாளில், அல்லது
குறிப்பிடப்படும்` வேறோரு நாளில் தண்டனையை அறிவிக்க வேண்டும்.
இது தான் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ள நடைமுறை.

இந்த வழக்கில் இந்த நடைமுறை சுத்தமாக மீறப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கு கோர்ட்டுக்கு வரவழைக்கப்பட்டவர் மாலை
5.30 மணி வரை அங்கேயே தங்க வைக்கப்பட்டு, அதன் பின்னர்
அன்றே – தண்டனையை நிறைவேற்றும் சடங்கு முடிகிறது.
அதாவது சனிக்கிழமை முகூர்த்தம் குறித்து,
(மறுநாள் ஞாயிறு – அப்பீலுக்குப் போக முடியாது – அதன் பிறகும்
ஒருவாரம் தொடர்ச்சியாக தசரா விடுமுறை) நேரடியாக
சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

ஒரு மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் -
முதலமைச்சராக கோர்ட்டுக்கு வருபவர்,
தண்டனை விதிக்கப்பட்டு நேரடியாக
சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார் என்றால் -

தனது அரசியல் சட்ட பொறுப்புக்களை பின் ஒப்படைக்க
கால அவகாசம் கொடுக்க வேண்டாமா ? நாள் கணக்கில்
இல்லாவிடிலும் குறைந்த பட்சம் ஒரு 2 மணி நேரமாவது
தன் சகாக்களிடம் மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்ய
அனுமதியளிக்க வேண்டாமா …?
தண்டனையை விதித்த பிறகு, நீங்கள் மாற்று ஏற்பாடு செய்து
கொள்ளவும், உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெறவும் வசதியாக
உங்களுக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கப்படுகிறது -
என்று சொல்லி இருந்தால் – 
கோர்ட்டின் பாரபட்சமின்மையை
புரிந்து கொள்ள முடியும் …?
இந்த அணுகுமுறை இல்லாமல்
போனது ஏன் …? சட்டத்தில் இதற்கு நிச்சயம் இடம் இருக்கிறது -
ஆனால் ஆணை இடுபவர் மனதில் இல்லாமல் போனது ஏன் ….?
சரி – சிறைக்குச் சென்ற பிறகும் ஏன் இத்தனை கெடுபிடிகள்…?
முதலமைச்சர் பொறுப்பில் இருந்தவரை நேரடியாக காராக்கிருகத்துக்கு
கொண்டு வந்து விட்டார்கள் – அவர் பார்த்துக்கொண்டு வந்த
பல பொறுப்புகள் பாதியில் இருக்கும். அதனை முழுமையாகச்
செய்ய ஆலோசனை பெற ஒரு மாநிலத்தின் தலைமைச்செயலாளர்
வந்தால், அவரை பார்க்க அனுமதிக்க மறுத்தது ஏன் …?

ஒரு நாள் முழுவதும், கிட்டத்தட்ட 7 மணி நேரம், ஒரு மாநிலத்தின்
தலைமைச்செயலரையும், ஆலோசகரையும் – சிறை வாசலில்
நிற்கவைத்து திருப்பி அனுப்பி – அவமதித்தது ஏன் …?
சரி – மறுநாள் ஜாமீனுக்கு பெட்டிஷன் கொடுத்தால், அதற்கடுத்த நாள்
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சொல்லி விட்டு,
மறுநாள் விசாரணைக்கு வந்தால் – மீண்டும் அடுத்த வாரம் தான்
விசாரணை என்று சொன்னது என்ன காரணத்தால்….?
அரசாங்க வக்கீலுக்கு உரிய நேரத்தில் அனுமதி உத்தரவு கொடுக்காதது
ஏன்…? இது கவனக்குறைவா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா….?
தனியாக ஒருவக்கீல் நியமிக்கப்படாத நேரங்களில்,
கோர்ட்டில் வழக்கமாகச் செயல்படும்
state govt.standing counsel தானாகவே இந்த வழக்கிலும் சேர்த்துக்கொள்ளப்
படுவது தான் மரபு. இல்லையென்றால், அட்வகேட் ஜெனரலுக்கு
தகவல் போகும். உரிய நேரத்தில் யாராவது ஒரு அரசு வக்கீல்
அனுப்பப்படுவார்…அது இங்கே நடக்காதது ஏன் …?
மீண்டும பதிவாளரைப் பார்த்து விசேஷ அனுமதி கோரி,
அரசு வக்கீலுக்கும் ஆணை வந்து, கோர்ட் கூடினால் -
வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலே -
அடுத்த வாரம் ரெகுலர் கோர்ட் விசாரிக்கும் என்று சொல்லிவிட்டு
போய்க்கொண்டே இருக்கிறார்……
முக்கியமான வழக்கு – ரெகுலர் கோர்ட் தான் விசாரிக்க வேண்டும்
என்பது கோர்ட்டுக்கு வரும் முன்பு தெரியாதா ?
அல்லது பதிவாளருக்குத்தான் தெரியாதா ?

முன்னதாகவே தலைமை நீதிபதியிடம் கலந்து ஆலோசனை
செய்திருக்க மாட்டார்களா ..?
ஏன் எல்லாரையும் வரவழைத்து அவமானப்படுத்த வேண்டும் …?
ஏன் டென்ஷனை, பரபரப்பை அதிகரிக்க வேண்டும்….?
எல்லாருக்கும் இன்று வெளியே வந்து விடுவார் என்கிற எதிர்பார்ப்பை
உண்டுபண்ணி விட்டு, பின்னர் மீண்டும் தள்ளிப் போடுவதன்
பின்னணி என்ன ….? வேறு எங்கிருந்தாவது உத்திரவு எதாவது
எதிர்பார்க்கப்படுகிறதா …?
இப்படி மாற்றி, மாற்றி இழுத்தடித்தால் – ஏற்கெனவே
கொதித்துப்போயிருக்கும் கட்சித்தொண்டர்களிடம் இது டென்ஷனை
அதிகரிக்காதா ? அல்லது வன்முறையைத் தூண்ட வேண்டும்
என்பது தான் உத்தேசமா…?
இரண்டு மாநிலங்களுக்கிடையே ஏற்கெனவே ஏகப்பட்ட
பிரச்சினைகள். காவிரி நீர் சம்பந்தமாக தகராறுகள்….
கோர்ட் வழக்குகள். கர்நாடகா அரசுக்கு தமிழ்நாட்டின் மீதும்,
சிறையில் இருக்கும் செல்வி ஜெயலலிதா மீதும் ஏகப்பட்ட
காழ்ப்புணர்ச்சி….
இந்த நிலையில் – உணர்வுகளுடன் விளையாடும் இத்தகைய
செயல்கள் இயல்பானவை தானா ?
கர்னாடகா அரசில் அதிகாரத்தில் இருக்கும்
காங்கிரஸ் கட்சிக்கு வெறுப்பு….
காங்கிரஸ் தலைமைக்கு சொல்லோணா வெறுப்பு …

சு.சு.வின் மறைமுக சித்து வேலைகள் தொடர்கின்றன….
இத்தனையையும் வாய் திறவாமல் வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கிறது பாஜக தலைமை …
காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை,
கச்சத்தீவு பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை
என்று மாறி மாறி தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் -
அம்மா போனால் – திண்ணை நமக்குத்தான் என்று
ஆவலுடன் காத்துக் கிடக்கிறது தமிழக பாஜக.
இவர்கள் அத்தனை பேரும், தனித்தனியாகவும்,
கூட்டாகச் சேர்ந்தும் செய்வது -
‘அப்பட்டமான பழிவாங்கல்’ அல்லாமல் வேறென்ன…..???

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...