சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் ஜெ., தாக்கல் செய்த ஜாமின் மனுவை நீதிபதி விசாரிக்க மறுத்ததால் இவரது தரப்பு வக்கீல்கள் கடும் ஆவேசமுற்றனர். கோர்ட் வெளியே வந்த ஜெ., தரப்பு ஜூனியர் வக்கீல்கள் கோர்ட்டை கடுமையாக விமர்சித்தனர். இது அநியாயம், சட்ட விரோம் என்று கருத்து தெரிவித்தனர். ஜெ., ஜாமின் மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ரத்ன கலா இந்த மனு குறித்து விசாரிக்க எனக்கு அதிகாரம் உள்ளதா என்பதை சிந்திக்க வேண்டும். எனவே வழக்கமான ரெகுலர் பெஞ்ச் விசாரிக்கட்டும் என்றார். வக்கீல்கள் ஜெ., தரப்பு உடல் நிலை குறித்து எடுத்துரைத்தனர். இதனால் அவரை விடுவியுங்கள் என்றனர். ஆனால் நீதிபதி எதையும் பொருட்படுத்தவில்லை. 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே இந்த விவாதம் நடந்தது. தொடர்ந்து நீதிபதி இருக்கையை விட்டு எழுந்து சென்றார். இதற்கு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரபல வக்கீல்களான ஜெத்மலானி, மற்றும் டில்லி வக்கீல்கள் அதிர்ச்சியுற்றனர்.
சொத்து குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான பவானி சிங்கையே அப்பீல் வழக்கிலும் அரசு வக்கீலாக கர்நாடக அரசு நியமித்தது. அதற்கான உத்தரவு பவானி சிங்கிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் இன்று ஆஜராகவில்லை. அவரது ஜூனியர் வக்கீல் ஆஜரானார். ஜெயலலிதா சார்பில் மூத்த வக்கீல் ராம்ஜெத் மலானி ஆஜரானார். அப்போது நீதிபதி ரத்னகலா, இது முக்கியமான வழக்காக இருப்பதால் வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்கை தான் விசாரிக்க விரும்பவில்லை, வழக்கமாக விசாரிக்கும் நீதிபதிக்கு அனுப்புவதாக அறிவித்தார்.
அவரிடம் ஜெயலலிதா தரப்பு வக்கீல் ராம்ஜெத் மலானி மனுவை உடனே விசாரிக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு நீதிபதி ரத்னகலா என்னால் மனுக்களை விசாரிக்க முடியாது என்று கூறி இருக்கையை விட்டு எழுந்து சென்றுவிட்டார்.
ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 6–ந்தேதி விசாரணைக்கு வருவதால் இந்த புதிய மனுக்கள் 7–ந்தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
ஜெயலலிதாவின் ஜாமின் மனுவை விசாரிக்க நீதிபதி மறுத்ததற்கு சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் ரமேஷ் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:–
ஜெயலலிதாவின் ஜாமின் மனுவை விசாரிக்க நீதிபதி மறுத்ததற்கு அரசியல் உள்நோக்கம் உள்ளது. இதுபற்றி ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் புகார் செய்வோம். மத்திய அரசு இதில் தலையிட்டு ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள அநீதியை தடுத்து நிறுத்த வேண்டும் அவருக்கு உடனே ஜாமின் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்ன மக்களட இவர்கள்... வெளியில் இருந்து வந்த ஒருவர் சொல்கிறார் நீதிபதி விசாரிக்காமல் சென்றது மிகப் பெரிய தவறு என்று.. தமிழகத்தில் உள்ள சில நீதிமான்களுக்கு மட்டும் இவை அனைத்து நன்றாக தெரிகிறது... ஜெயாவும் கருணா போல கர்நாடகாவில் எத்தனை அணைகளை வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுங்கள் என்று முதலில் சொல்லிவிட்டு 25 வருடம் கழித்து ஒரு சிலையை வைத்துவிட்டு காவிரிப் பிரட்சனை தீர்த்துவிட்டது என்று சொன்னால் இந்த நீதிமான்கள் கொஞ்சுவார்கள்... சட்டப் படி வழக்கு நடத்தி அதில் தமிழகத்துக்கு சார்பாக வெற்றி கிட்டினாலும், அவர்கள் அதனை பழிவாங்க என்ன வேண்டுமானாலும் செய்தாலும், இங்கே இருக்கும் சில ஜென்மங்கள் மட்டும் நீதி நேர்மை நியாயம் ன்னு சொல்லிகிட்டு திரியுது... ஜெயா ஊழல் செய்ய வில்லை ன்னு யாருமே சொல்லவில்லை.. ஆனால் இங்கே நடப்பது பழிவாங்கும் செயல்... கன்னடர்கள் ஒன்று பட்டு இருக்கிறார் இங்கே தமிழர்கள் நீதி நேர்மை நியாயம் ன்னு காமெடி செஞ்சிகிட்டு இருக்கிறார்கள்... இத்தனை நீதிமான்கள் 3 பேர் மதுரையில் உயிரோடு கொளுத்தப் பட்ட வழக்கில் அனைவரும் விடுதலை ஆகி அழகிரியை மந்திரி ஆக்கிய போது எங்கே போனாங்க? அப்போ மட்டும் நீதி நியாயம் எங்கே போச்சு?

No comments:
Post a Comment