Sunday, October 5, 2014

போக்குவரத்து விதிமீறல்கள்

போக்குவரத்து விதிமீறல்கள்அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.இதனால்விபத்துக்களும்,உயிரிழப்பும் நாளுக்கு நாள்அதிகரித்து வருகின்றன.மொபைல்போனில் பேசிக்கொண்டுவண்டி ஓட்டுபவர்களாலும்,சாலையை கடப்பவர்களாலும் அதிகவிபத்துக்கள் ஏற்படுகின்றன.இதனைதடுக்கும் விதமாக போக்குவரத்துவிதிமீறல்களுக்கான விதிகளைசற்றே கடுமையாக்கியுள்ளது மத்தியஅரசு.இந்த பதிப்பில் சாலை விதிகலை மீறினால் கட்டவேண்டிய அபாரதவிபரங்களை பற்றி தெரிந்துக் கொள்வோம் .

• 
உரிய ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதமாக ரூ.300விதிக்கப்படும்.

• 
ஓட்டுனர் உரிமம் இல்லாதவரை வாகனம் ஓட்ட அனுமதித்தால் ரூ.300.

• 
முறையான ஆவணங்கள் இல்லாவிட்டால் ரூ.100.

• 
இருசக்கர வாகனத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவரை பின்புறத்தில் ஏற்றினால்ரூ.100.

• 
போக்குவரத்துக்கு தடங்கல் ஏற்படுத்தினால் ரூ.100.

• 
நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தினால் ரூ.100.

• 
தவறான பாதையில் போக்குவரத்து சிக்னலை கடக்க முயன்றால் ரூ.100

• 
தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்றால் ரூ.100.

• 
மியூசிக்கல் ஹாரனை ஒலித்துக் கொண்டே தாறுமாறாக வண்டி ஓட்டினால்ரூ.500

• 
டிரைவிங்கின்போது மொபைல்போனில் பேசினால் ரூ.100 (டிரைவருக்குமட்டுமில்லைரோட்ல குறுக்கே வர்றவங்களுக்கும்...5000 ரூபாய் போடுங்க...புண்ணியமா போகும்)

• 
ஒரு கையால் வாகனத்தை தாறுமாறாக ஓட்டினால் ரூ.500.

• 
போக்குவரத்து போலீஸின் சமிக்ஞையை மீறினால் ரூ.200.

• 
போலீஸ் அதிகாரியிடம் தவறான தகவல் அளித்தால் ரூ.200.

• 
ஆட்டோ ரிக்ஷாவில் மீட்டருக்கு மேல் பணம் பிடுங்கினால் ரூ.50.

• 
எல்எல்ஆர் எனும் பழகுனர் உரிமம் இருந்தாலும், "L" போர்டு இல்லாமல்வாகனம் ஓட்டினால் ரூ.100.

• 
ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டினால் ரூ.100.

• 
கவனக்குறைவாக ரிவர்ஸ் எடுத்தால் ரூ.100.

• 
ஒலிப்பான் தடை செய்யப்பட்ட பகுதியில் ஹாரன் அடித்தால் ரூ.100.

• 
கருப்பு கண்ணாடி கார்களுக்கு ரூ.100

• 
முறையான நம்பர் பிளேட் இல்லாவிடில் ரூ.100 (ஆட்டோரிக்ஷாக்களுக்கு ரூ.50)

• 
சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறி சென்றால் ரூ.200.

• 
உடல் குறைபாடு மற்றும் மனநிலை சரியில்லாத நிலையில் டிரைவிங்செய்தால் ரூ.100.

• 
அனுமதி இல்லாமல் ரேஸ் ஓட்டினால் ரூ.300.

• 
குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.2,000.

• 
பாரக்கிங் லைட் இல்லாத காருக்கு ரூ.100, ஆட்டோரிக்ஷாவுக்கு ரூ.50

• 
ஒரு வழிப்பாதையில் எதிர்திசையில் சென்றால் ரூ.100, ஆட்டோரிக்ஷாவுக்குரூ.50

• 
அனுமதி இல்லாத இடத்தில் யு-டர்ன் போட்டால் ரூ.100 ஆட்டோரிக்ஷாவுக்குரூ.50.

• 
சாலையில் தடம் மாறி சென்றால் ரூ.100, ஆட்டோரிக்ஷாவுக்கு ரூ.50.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...