Thursday, October 2, 2014

தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் காலமானார்

பிரபல தொழிலதிபரும், காந்தியவாதியுமான பொள்ளாச்சி நா.மகாலிங்கம், சென்னையில்  காலமானார்; வயது 91.காந்தி ஜெயந்தி தினமான , சென்னை, ஏ.வி.எம்., ராஜேஸ்வரி மஹாலில், வள்ளலார் குறித்த நிகழ்ச்சி நடந்தது. இதில், பொள்ளாச்சி மகாலிங்கம் பங்கேற்றார். விழா மேடையேற நின்றிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது.
மறைந்த தொழிலதிபர், பொள்ளாச்சி நா.மகாலிங்கம், சக்தி குழும நிறுவனங்களின் தலைவர். அவருக்கு, 2007ல் பத்ம பூஷண் விருது வழங்கி, மத்திய அரசு கவுரவித்தது. காந்தியத்தை வாழ்வின் லட்சியமாக கொண்டிருந்தார் மகாலிங்கம். தவிர, வள்ளலார் மார்க்கமான சுத்த சமரச சன்மார்க்கத்துக்காக எண்ணற்ற பணிகளைச் செய்துள்ளார்.
கடந்த 1923ல், பொள்ளாச்சியில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த மகாலிங்கம், 

1952 - 67 வரை, காங்., எம்.எல்.ஏ.,வாக இருந்தார். இவருக்கு பாரதியார் பல்கலை, அண்ணா பல்கலை, சென்னை பல்கலை உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளன.
தொழிலதிபர் மகாலிங்கம், எம்,எல்.ஏ.,வாக இருந்தபோது பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை பொள்ளாச்சிக்கு பெற்றுத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...