Thursday, February 2, 2017

2017 பட்ஜெட் சிறப்பம்சங்கள் .

50 புடவைக்கு மேல வச்சி இருந்தா 20% வரி .

அம்மா வீட்டுக்கு வருசத்துக்கு ஒரு தடவ தான் போகணும் அடிக்கடி போனா 10% வரி .
டிவி பார்த்து புருசனுக்கு சமைச்சி போட்டு டெஸ்ட் பண்ணால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் .
பெண்களின் சாபத்துக்கு ஆளாகும் ஜாக்கெட் தைக்கும் டெய்லருக்கு வருமானத்தில் முற்றிலும் வரி நீக்கம் .
ஒரு நாளைக்கு ஒரு சீரியல் தான் பார்க்கணும்.
கட்டாத பட்டுபுடவைக்கு 50% வரி விதிப்பு . இனி பட்டு புடவை வாங்கினால் பான் கார்ட் அவசியம்.
குழந்தைகளை 10 மணிக்கு காப் சிரப் கொடுத்து தூங்க வச்சிடனும்.
அம்மா மாமியார் கூட போன்ல அஞ்சு நிமிஷம்தான் பேசணும் என்ன சமையல் என்ன மசாலா என்று அதுக்கு மேல பேசினாலும் ஒரு காலுக்கு 100 ரூபாய் பில்லில் சேர்க்க படும் .
கொழுந்தியா வீட்டுக்கு போறதுக்கு ரயில் பேருந்தில் 50% கட்டண சிறப்பு சலுகை .
10 மணிக்கு மேல புருஷன் வெளிய இருந்தால் எங்க இருக்கீங்கன்னு கேட்டு தொல்லை பண்ண கூடாது,மீறி செய்தால் போன் இணைப்பு துண்டிக்கப்படும் .
புருசனோட போன் பாஸ் வேர்ட் பேஸ் புக் பாஸ் வேர்ட் கேட்க தடை,அதுக்கு மேல கேட்டால் அவங்க அம்மா கூட போன் ல பேச அந்த ஐந்து நிமிடமும் தடை செய்யப்படும் .
கணவன் மனைவி இருவரும் துணி வைக்க ஒரே பீரோ தான் யூஸ் செய்யவேணும் தனி பீரோ யூஸ் செய்தால் 5% வரி உண்டு .
மாமியார் எம்புட்டு நச்சினாலும் அத புருஷன் கிட்ட குறையா சொல்லாமல் அவர்களே அதை சந்திக்க வேண்டும்.
சமையலில் தனிக்கவனம் செலுத்தவேண்டும் கண்டிப்பாக சாம்பாருக்கு ,ரசத்துக்கு வித்தியாசம் தெரிய வேண்டும் .
எக்ஸ்ட்ரா பணம் இருந்தால் சேமிக்க வேண்டும் உடனே பேன்சி வளையல் தொங்கட்டா வாங்க கூடாது .
புருஷன் வழி சொந்தங்கள் வந்தால் வீட்ல சமையலுக்கு சாமான் இல்லனு அடிக்கடி புருஷன கடைக்கு அனுப்ப கூடாது ,கடைக்கு போற வழில இது சொல்ல மறந்துட்டேனு அது வாங்கிட்டு வாங்கனு கடைக்கு போற வரை லிஸ்ட் சொல்ல கூடாது .
குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் டீச்சர் பற்றி கணவரிடம் அடிக்கடி தெரிவிக்க வேண்டும் .
அக்கா, தங்கச்சிகளுக்கு உதவி பண்ணா அதெல்ல தேவை இல்லனு தடை போட கூடாது .
உப்புமா முற்றிலும் தடை செய்யப்படும் மீறி சமைத்தால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்
மொத்தத்தில் இதை நடைமுறை படுத்தினால் சிறந்த பட்ஜெட்டாக இருக்கும் . அனைத்தும் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது .
இப்படி பட்ஜெட் தாக்கல் செய்தால் தினமும் ரவை உப்புமா செய்து கொடுத்து சாப்பிடச் சொல்லி ஆயுள் தண்டனை கொடுத்துடுவோம். ஜாக்கிரதை!!
 யாருகிட்ட!!???.....…..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...