சந்திராஷ்டமம் என்பது
✤ சந்திராஷ்டமம் என்பது குறிப்பிட்ட ஜாதகத்தில் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் நிலைபெறும் காலமான இரண்டே கால் நாட்களாகும். சந்திரன் என்பது கோசார சந்திரன் ஆகும். அஷ்டமம் என்பது எட்டாமிடம் என்று பொருள்படும்.
★ சந்திராஷ்டமம் என்றதும் உங்களுக்கு பயம் உண்டாவது இயற்கையே. வாரபலன், மாதபலன் எழுதும் ஜோதிடர்கள் சந்திராஷ்டமம் உஷார் என்று வேறு எழுதி விடுகிறார்கள். இதைப்படித்ததும் சந்திராஷ்டமம் நாட்களை பெரும்பாலும் தவிர்க்கிறோம். நீங்கள் எந்த ராசியில் பிறந்து இருக்கிறீர்களோ, உங்கள் ராசிக்கு எட்டில் சந்திரன் கோசார ரீதியாக சஞ்சரிக்கும்போது சந்திராஷ்டமம் உண்டாகிறது.
★ உதாரணமாக நீங்கள் மேஷ ராசியில் பிறந்து இருக்கிறீர்கள். உங்களுக்கு எட்டாம் ராசியான விருச்சிக ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும்போது சந்திராஷ்டமம் உண்டாகிறது. ஒவ்வொரு மாதத்திலும் சந்திரன் விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை போன்ற நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும்போது சந்திராஷ்டமம் உண்டாகிறது.
★ சந்திராஷ்டமம் நாட்கள் என்று கூறப்படும் 2 1ஃ2 நாட்கள் உங்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும். எடுக்கும் காரியம் தடையும் தோல்வியும் உண்டாகும். மனதில் குழப்பமாக இருக்கும். தேவையில்லாத சிக்கலில் நீங்கள் அகப்பட்டுக் கொள்வீர்கள். எனவே இக்காலத்தில் நீங்கள் புதிய முயற்சியில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சந்திராஷ்டமம் நாட்களில் எதிரிகளால் தொல்லை, துன்பம் போன்றவையும் உண்டாகும். சிலர் விபத்திலும் அகப்பட்டுக் கொள்வார்கள்.
★ 'கெட்டவர் கெட்டு இருந்தால் நல்லது" என்பது ஜோதிட விதி. எனவே தேய்பிறை சந்திரனில் ஒருவர் பிறப்பெடுத்தால் உங்களுக்கு கெடுதி உண்டாகுமோ? என்ற கேள்வி எழலாம்.
★ உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் தேய்பிறை சந்திரனில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் அதிக கெடுதி செய்வதில்லை. வளர்பிறை சந்திரனில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் கெடுதி செய்கிறது. அதற்காக தேய்பிறை சந்திரனில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் நற்பலன் செய்யுமா? என்ற கேள்வி எழலாம். கண்டிப்பாக நற்பலன் செய்யாது.
★ வளர்பிறை சந்திரனில் உண்டாவது போல அவ்வளவு கெடுதி ஏற்படாது. சந்திராஷ்டமம்.
No comments:
Post a Comment