மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை பலர் எழுப்பி வரும் நிலையில், அவர் உயிரிழந்த நிலையில் தான் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், என்று அந்த மருத்துவமனையில் முன்னாள் பெண் மருத்துவர் ராமசீதா, கூறியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற ஜெ கீதா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய டாக்டர்.ராமசீதா, ”ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதித்த போதே அவருக்கு நாடி துடிப்பு இல்லை. உயிரற்ற நிலையிலேயே அவர் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 வது நாளில், மெரினாவில் எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே உள்ள இடத்தில் ஆய்வு நடத்தினார்கள்.
இதன் காரணமாகவே நான் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினேன்.
ஜெயலலிதா முகத்தில் இருந்த அந்த கருப்பு குழிகள், உடலை பதப்படுத்தப்பட்டதால் தான் உண்டானவை. அவரது உடலில் ரத்தம் முழுவதுமாக எடுக்கப்பட்டு, உடல் பதப்படுத்தப்பட்டது.
இந்த தகவல்களை விசாரணை கமிஷன் முன்பு கூற நான் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
டாக்டர்.ராமசீதாவின் இந்த பேச்சால், தமிழக அரசியலில் புது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment