தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவால் முடிந்தால் அவைத்தலைவரை கட்சியை விட்டு நீக்கட்டும்?
அதிமுகவின் Top 3 பதவிகள்
1.பொதுச்செயலாளர்
2.பொருளாளர்
3.அவைத்தலைவர்
2.பொருளாளர்
3.அவைத்தலைவர்
இதில் சசிகலா நியமன பொதுச்செயலாளர்தானே தவிர தேர்வு செய்யப்பட்ட பொதுச்செயலாளர் அல்ல.
அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் அவைத்தலைவருக்கு மட்டுமே உண்டு.
அதிமுகவின் பொதுச்செயலாளரை தொண்டர்கள்தான் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்சி விதியை ஏற்படுத்திய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உண்மையிலேயே தீர்க்கதரிசிதான். ( இந்தியாவில் எந்த கட்சியிலும் இல்லாத ஒரு விதி இது)
அந்த விதிதான் தற்போது சசிகலாவுக்கு ஆப்பாக வந்து நிற்கிறது.
நியமன பொதுச்செயலாளருக்கு யாரையும் கட்சியை விட்டு நீக்க அதிகாரம் இல்லை.
அதன் அடிப்படையில் நியமன பொதுச்செயலாளர் சசிகலா பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ்சை நீக்கியது செல்லாது.
அதிமுகவை கைப்பற்றினார் பன்னீர் செல்வம்
.
அதிமுகவைப் பொறுத்தவரை கட்சிக்கு தனி தலைவர் என்பவர் ஒருவர் கியைாது. அந்த கட்சியின் அவைத்தலைவர்தான் கட்சியின் தலைவர்.
.
அதிமுகவைப் பொறுத்தவரை கட்சிக்கு தனி தலைவர் என்பவர் ஒருவர் கியைாது. அந்த கட்சியின் அவைத்தலைவர்தான் கட்சியின் தலைவர்.
அதன்படிப் பார்த்தால் அதிமுக கடசியின் தலைவர் மதுசூதனன்தான், அதிமுக கட்சியின் தலைவராவார்.
சசிகலா தற்போது பொதுக்குழு, செயற்குழுவில் தற்காலிக பொதுச் செயலாளராகதான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுக சட்டவிதியில் தற்காலிக பொதுச் செயலாளரை உருவாக்க இடம் இல்லை. ஆகவே சசிகலா பொதுச் செயலாளா் கிடையாது என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கட்சியின் பொருளாளா், மற்றும் தமிழகத்தின் முதல்வரான பன்னீர் செல்வம், மற்றும் அவரது ஆதரவாளா்கள் கட்சியை விட்டு நீக்க சசிகலாவுக்கு தகுதி கிடையாது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த கட்சியின் அவைத் தலைவா் மதுசூதனன், பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக வந்தது. அதிமுகவே வந்ததுக்கு சமம் என்று கூறப்படுகிறது.
இந்த செய்தி அறிந்த மன்னார்குடி கும்பல் மற்றும் சசிகலா தலையில் இடி இறங்கியதுபோல தவித்து வருகின்றனா்.
அவா்கள், கட்சியிலும், ஆட்சியிலும் இனி வருவது கடினம் என்றே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது
No comments:
Post a Comment