அரசியல் கட்சிகள் கீழ்கண்ட நிபந்தனையின் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கின்றார்களா? அப்படி இருந்தால் அவர்களை பொதுமக்கள் தேர்தலில் வெற்றிபெற செய்யமுன்வருவார்களா? இப்படி நடக்குமேயானால் லஞ்சம் இல்லாத ஆட்சியையும் நேர்மையான ஆட்சியையும் வழங்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நிபந்தனை 1
தேர்தலில் போட்டியிடுபவர் முழுநேரக்கல்வி மூலம் குறைந்தது UG பண்ணி இருக்கவேண்டும் இல்லையேல் பள்ளிப்படிப்பாவது முடித்திருக்கவேண்டும்.
நிபந்தனை 2
தேர்தலில் போட்டியிடுபவர்கள் எந்தக்காரணத்தைக்கொண்டும் ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்யக்கூடாது
நிபந்தனை 3
எந்தக்காரணத்திற்காக தேர்தலில் போட்டியிடுகிறாறோ அந்த நோக்கத்தில் செய்ய முடிகின்ற பொதுக்காரணத்திற்குமட்டும் முன்னுரிமை கொடுப்பதாக இருக்கவேண்டும்
நிபந்தனை 4
எந்தக் காரணம் கொண்டும் தனிப்பட்ட நபரை எப்பொதும் கூட வைத்துக்கொள்ளகூடாது ஒரு உதவியாளர் தவிர மேலும் எல்லா மக்களுக்கும் தான்பொதுமனிதன் என்ற எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும்.
நிபந்தனை 5
ஒவ்வொருவருட முடிவிலும் தான் நிறைவேற்றியதிட்டத்தை மக்கள் மன்றத்தில் விவாதிக்க சம்மதம் தெரிவிக்க வேண்டும்.
நிபந்தனை 6
அவரவர் தொகுதிக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்ய முடியுமோ அதைச் செய்யவேண்டும்.
நிபந்தனை 7
எந்த காரணத்தைக் கொண்டும் உறவினர்களின் தலையீடு இருக்கவே கூடாது.
நிபந்தனை 8
யார் தவறு செய்தாலும் அதைச்சட்டம் பார்த்துக்கொள்ளும் என்று தனது பணியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
நிபந்தனை 9
தேர்தலில் ஒருவேளை வெற்றிபெற்றுவிட்டால் உடனே தன்னிடம் உள்ள அசையும் அசையா சொத்து தன்னை சார்ந்தவர்களிடமும் உள்ள சொத்துக்கள் எல்லாம் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டுவரவேண்டும். மேலும் பதவி முடிந்தவுடன் தன்னிடமும் தன்னை சார்ந்தவரிடமும் உள்ளசொத்தை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டுவரவேண்டும்.
நிபந்தனை 10
தொகுதியின் உறுப்பினர் என்ற முறையில் தொகுதி மக்கள் எந்த நேரத்தில் பார்க்கவிருப்பட்டாலும் முடியாது என்ற வார்த்தையை உபயோகப்படுத்தக்கூடாது தவிர்க்க முடியாதகாரணம் இருந்தால் ஒழிய.
நிபந்தனை 11
தமது தொகுதிக்குள் இருக்கிற காட்டு முள்வேலியை அறவே ஒழிப்பேன் என்ற உறுதிமொழிகொடுத்து அதை வேறோடு அழிக்க முயற்சி எடுக்கவேண்டும்.
நிபந்தனை 12
ஆங்காங்கே தடுப்பனை கட்ட முயற்சி எடுக்க வேண்டும்.
நிபந்தனை 13
தொகுதி முழுவதும் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும்
இப்படி தொகுதிகளுக்கு செய்யவேண்டிய வேலைகளை செய்து பதவிக்கு வருவதற்கு முன் எப்படி இருந்தது வந்தபின் எப்படிமாற்றிஇருக்கிறேன் என்பதை ஆதாரத்துடன் தொகுதி மக்களுக்கு விளக்கவேண்டும். இவ்வாறு செய்கின்றவர்களை தேர்தலில் நிற்க வைத்தோமானால் ஒழிய நம் நாட்டின் இயற்கை வளத்தை காப்பாற்ற முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம். மக்களே சொல்லவேண்டியவற்றில் கொஞ்சம் தான் சொல்லி இருக்கிறேன்.
இதற்கு தயாராக இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்தால் மக்கள் நலம் பெறுவார்கள். தயாரா எல்லாம் செய்வீர்களா?
No comments:
Post a Comment