ஜெ., மரணத்தில் உள்ள மர்மங்களை கண்டறிய, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,'' என, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.
நாமக்கல் எம்.பி., சுந்தரம், கிருஷ்ணகிரி எம்.பி., அசோக்குமார் ஆகியோர், நேற்று முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, ஆதரவு தெரிவித் தனர். அப்போது, அவர்கள் பேசியதாவது:
நாமக்கல் சுந்தரம்: ஜெயலலிதா, 75 நாட்கள், அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தார். மூத்த நிர்வாகிகள், இரவு பகலாக, அங்கு இருந்தோம். டிச., 5 இரவு, 11:30 மணிக்கு, ஜெ., உயிர் பிரிந்தது. ஜெ., இறந்ததும், சசிகலா பின்னால், 15 பேர் அணிவகுத்து வந்தனர்.
ஜெ., உடல் அங்கு உள்ளது. சசிகலா, சுடிதாரில் வருகிறார்; இது நியாயமா; அவர் கண்ணில் இருந்து, ஒரு சொட்டு கண்ணீர் வந்ததா? அவரது குடும்பத்தினர், ஒவ்வொருவராக சென்று பார்த்தனர்; கூடிப் பேசினர். ஜெ., உடலை பார்க்க, எங்களை அனுமதிக்கவில்லை. ஜெ., உடல் ராஜாஜி ஹாலுக்கு வந்த போது, நாங்கள் பின்தொடர்ந்தோம். அங்கும் அருகில் நிற்க அனுமதிக்கவில்லை. சசிகலா குடும்பத்தினர் நின்று கொண்டு, எங்களை பார்க்க விடவில்லை.

முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிரித்துக் கொண்டி ருந்தார். லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, பிரதமர் மோடி வருகிறார் என்றதும் தலை சீவுகி றார். அவருக்கு ஒரு சொட்டு கண்ணீர் வந்ததா; பச்சை துரோகி. ஆட்சியை கைப்பற்றி விடலாம் என, சசிகலா கனவு கண்டதால், அவரை கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா.
சசிகலாவுக்கு பன்னீர் பற்றி, கருத்து கூற தகுதி இல்லை. அ.தி.மு.க., ஜெ., வளர்த்த கட்சி. அதற்கு, சசிகலா பொதுச்செயலரா; எந்த தகுதியும் இல்லாத வருக்கு, இப்பதவியை வழங்கி உள்ளனர்.
நடராஜன், 'குடும்ப அரசியல் நடத்துவோம்' என்கி றார். நடராஜனும், சசிகலாவும், கருணாநிதி தலைமையில் திருமணம் செய்து கொண்டவர்கள். ஜெ., உடல் இருந்த போது, சசிகலா குடும்பத்தினர், ஷூ காலுடன் நின்றனர்.
நான் அய்யப்ப பக்தர். அவரிடம்வேண்டிவிட்டு தான் முடிவு எடுப்பேன். தற்போதும், அவரை வணங்கி வந்துள்ளேன். வெற்றி நிச்சயம். ஜெ., மர்ம மரணம் குறித்து, சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஜெ., வசித்த வீடு, நினைவு இல்லமாக மாற்றப்பட வேண்டும்.
கிருஷ்ணகிரி அருண்குமார்: எம்.ஜி.ஆர்., உருவாக்கிய இயக்கத்தை, ஜெ., கட்டிக்காத்த எக்கு கோட்டையை, சில கருங்காலிகள், பிளக்க பார்க்கின்றனர். அதை துாள் துாளாக்க,ஜெ.,வின் உண்மையான தொண்டர், முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் அணிவகுத்துள்ளோம்.
சசிகலாவை, வீட்டு வேலைக்காரியாக தான், ஜெயலலிதா வைத்திருந்தார். அவர் முதல்வ ராகலாமா; நர்ஸ், டாக்டராக முடியுமா? சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித் தால், தொகுதி பக்கம் போக முடியாது. 'நீ உப்பு போட்டு சாப்பிடு கிறாயா' என, தொகுதி மக்கள் கேட்கின்றனர். 'சற்று தாமதமாகி விட்டது; போய் சேருகிறேன்' எனக்கூறி, இங்கு வந்து விட்டேன்.
ஜெ., மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்; அவர் குடியிருந்த வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.
No comments:
Post a Comment