நாட்டையே உலுக்கியுள்ள பெரும் விஷயம், ஜெயலலிதாவின் மரணம் பற்றிய சர்ச்சைகள் தான். மக்கள் தலைவரின், மாநில முதல்வரின் மரணம், அது தொடர்பான சிகிச்சைகள் எதுவும், இப்படி நாட்டில் எங்கும் சர்ச்சை ஆனது இல்லை.
இதுவரை நிலவிய சந்தேகங்களுக்கும், விவாதங்களுக்கும், மர்மங்களுக்கும் வலு சேர்ப்பதாக, முதல்வர் பன்னீர்செல்வத்தின் பேட்டி அமைந்து விட்டது. அவர் கூறியது இது தான்...
'முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, பொது மக்களுக்கு சந்தேகங்கள் உள்ளன; அவற்றை தீர்க்க, உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்படும்' என்பது தான். பன்னீரின் சந்தேகம் நியாயமானது; ஏனெனில், ஜெ.,வின் பொறுப்புகளை கவனித்த இவரே, ஜெ., சிகிச்சையில் இருந்த, 75 நாட்களும், நேரில் பார்க்க முடியவில்லையாம். ஏற்கனவே, சாதாரண மக்களுக்கும், இப்படி சந்தேகங்கள் எழுந்தன. இதற்கு என்ன காரணம்?
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., இருந்த போது, 12 அறிக்கைகளை வெளியிட்டது, அந்த மருத்துவமனை. 'நீர் சத்து குறைபாடு, காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்' என்ற முதல் அறிக்கை துவங்கி, தொடர்ந்து அறிக்கைகள் வந்தன.
ஆனால், அரசு சார்பில், மருத்துவமனையில் கூடவே இருந்த, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அல்லது தலைமைச் செயலர் சார்பில், எந்த அறிக்கையும் வெளிவரவில்லை. இவற்றில் எல்லாம் ஆச்சரியம் இல்லை. யாரையும் பார்க்க அனுமதிக்காமல், கூடவே இருந்தாரே சசிகலா, அவர் விளக்கம் தரலாமே?
'ஜெயலலிதாவோடு, 33 ஆண்டுகள் கூடவே இருந்தேன்; ஒன்றரை கோடி பிள்ளைகளை, உன் வசத்தில் ஒப்படைத்திருக்கிறேன் என, அவரது ஆன்மா, என் அருகில் வந்து ஆணையிடுவதாகவே, நான் உணர்கிறேன்' என, பொதுச்செயலராகி, தொண்டர்களை சொந்தம் கொண்டாடும் சசிகலா, இதுவரை தொண்டனின் சந்தேகத்தை ஏன் தீர்க்கவில்லை?
எழுதி வைத்து, மூன்று முறை, கட்சியினர் முன் பேசி விட்டார்; அப்போதும் விளக்கவில்லை. இதுவரை நிருபர்கள் கூட்டமே நடத்தாதவர், 7ம் தேதி நள்ளிரவு திடீரென பேட்டி அளித்தார்.
தன் மீது குறை கூறியபோது, அவசரமாய் நள்ளிரவில் விளக்கம் தந்தவர், அன்று காலையில், ஜெ., உடல்நிலை குறித்து, பி.எச்.பாண்டியன் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியபோது, ஏன் பதில் தரவில்லை?
'அப்பல்லோவில் மட்டும் அல்ல; போயஸ் கார்டனில் நடந்தது என்ன' என, அவர் கேட்டதற்கு, போயஸ் கார்டனில் ஜெ.,வுடனே இருந்த சசிகலா, பதில் தராதது ஏன் என்பதே, சாமானியனின் கேள்வியும் சந்தேகமும்!
குடும்ப டாக்டர் எங்கே?
ஜெ., இறந்த பின், அவரது உடல் அருகிலேயே நின்றிருந்த, குடும்ப டாக்டர் சிவக்குமார், அதன்பின் யார் கண்களிலும் படாமல் இருக்கிறார். இதனால், 'ஜெ.,வின் இறப்பு குறித்த மர்மம், அவரது உடலுடன் புதைந்து விட்டது' என்கின்றனர், ஜெ., விசுவாசிகள்.
முதல்வராக, சசிகலா பொறுப்பேற்கும் போது, ஜெ., இறப்பு குறித்து, எந்த சர்ச்சையும் ஏற்படக் கூடாது என்பதற்காக, லண்டனில் இருந்த டாக்டர் ரிச்சர்ட் பீலேவை, இரு மாதங்களுக்கு பின், சென்னைக்கு வரவழைத்து பேட்டி கொடுக்க வைத்தனர். அப்போது, ஜெ., குடும்ப டாக்டர் சிவக்குமார் அங்கில்லை. இவர், சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் கணவர். இவர் தான் போயஸ் தோட்டத்தில், ஜெ.,வின் உடல்நலத்தை
கண்காணித்து வந்தவர். டாக்டர்கள் ரிச்சர்ட் பீலே, பாபு, பாலாஜி ஆகியோர் பேட்டி அளித்தபோது, 'ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவும், அதிக ரத்த அழுத்தமும் இருந்தது' என்றனர். இதற்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய கடமை, சசிகலா உறவு டாக்டருக்கு இருக்கிறது.

No comments:
Post a Comment