நம்மில் பிறத்தியாருக்கு அறிவுரை சொல்லாதவர்களே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்....
யாருக்காவது...எவ்விதமாவது...ஏதாவது அறிவுரை சொல்லிகொண்டும்..அதனை அவர் கேட்கவேண்டும் என்றும்... கேட்காத பட்சத்தில் கோவப்பட்டுகொண்டும்தான் இருக்கின்றோம்...
நமக்கு நம்முடைய கோணத்தில் நாம் சொல்வது முற்றிலும் சரி.. முறையானது..சரியானது...
அதே சமயத்தில் கேட்பவருக்கு பொருத்தமானதா... அவரால் எந்த அளவு அதனை செயல்படுத்தவோ... வெற்றியடையவோ முடியும்
அவரது மனநிலை அதற்கு பொருத்தமானதா என்பதை முழுவதுமாக நாம் யோசிக்க தவறிவிடுகின்றோம் என்பதே உண்மை...
அவரது நன்மையாக நினைத்து மிக ஆதங்கபட்டு நமது கருத்தை அவரிடம் திணிக்கவே முயற்சிக்கின்றோம்....
நாம சொல்றத யாரு கேக்கறா...எப்படியோ போகட்டும் என்று ஆதங்கபட்டுகொள்ளவும் தவறமாட்டோம்...
கேட்பவர்களும் அவர்களுக்குள்..சில யோசனைகளை செய்திருப்பர்.. சில முரண்பாடுகள் தோன்றும்.. குழப்பம் ஏற்படும்போது... நன்மையாக முடியவேண்டியதுகூட... தோல்வியை தழுவிவிடும்....
நமக்கு சரியென்று தோன்றியதை..நாம் சில விளக்கங்களோடு..எடுத்து சொல்லலாம்..
அதே சமயத்தில் அவர் மனதில் என்ன இருக்கின்றது என்பதையும் அதன் நியாயத்தையும் கொஞ்சம் புரிந்துகொண்டு..மிகுந்த முரண்பாடு இல்லாமல்...ஓரளவு அவரது கருத்தோடு ஒத்துபோகும் ..அதன் நன்மைகள் சம்மந்தமாக இருக்கலாம்..
4 பேருக்கு பொதுவான அறிவுரைகள் சொல்லும்போது.. எந்த கட்டாயமும் இல்லை... எந்த வேதனையும் ஏற்படபோவதில்லை... யாருக்கு எது தேவையோ அதனை அவர்கள் கட்டாயம் எடுத்துகொள்வர்...
சொல்வதை முறையாக சொல்வோம்...நமக்கும் பிறத்தியாருக்கும் வேதனையோ மனகுழப்பமோ ஏற்படாதவாறு...
நம் நலனில் அக்கரைகொண்டோர் சொல்வதை விருப்பமாக கேட்டுகொள்வது நாகரிகம்..
அதே சமயம் அவர் மனம் நோகாதவாறு தன்நிலை விளக்கம் கொடுத்து நிராகரிக்கலாம்
அல்லது... பரிசீலனையில் வைத்துகொண்டு...தமது முயற்சியை தீவிரபடுத்தி வெற்றிபெற்று காட்டலாம்...
யாரும் யாருடைய மனதையும் நோகடிக்காமல் இருப்பதே சிறந்த சேவைதான்...
செல்வி அருள்மொழி....மனநல ஆலோசகர்
No comments:
Post a Comment