Thursday, April 6, 2017

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க என்ன வழி?


🌀 ரத்த கொதிப்புக்கான மாத்திரைகள் உட்கொண்டு ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். உடல் பருமனை உடற்பயிற்சிகள் மூலம் குறைத்து, சரியான எடை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் உயரத்தை சென்டிமீட்டரில் எடுத்துக்கொண்டு அதிலிருந்து நு}றை கழித்தால் வரும் அளவே உங்களின் சரியான எடையாகும்.
🌀 ஒரு கிலோ எடையை குறைத்தால் மூன்றிலிருந்து நான்கு மி.மீ., எச்.ஜி., ரத்த அழுத்தம் குறையும். எடுக்கும் உப்பின் அளவை பாதியாக குறைத்தால், ஏழு மி.மீ., எச்.ஜி., ரத்த அழுத்தம் குறையும். ஊறுகாய், கருவாடு மற்றும் உப்பு போட்டு சமைக்காமல், சாம்பாரில் பாதி உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

🌀 இரவில், 6-8 மணி நேரம் தூங்குதல், யோகா செய்தல், மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொள்ளுதல் போன்றவற்றால் ரத்த அழுத்தத்தை குறைக்கலாம். ரத்த அழுத்தம் சிறிதளவு மட்டும் அதிகமாக இருந்தால், மாத்திரை இல்லாமல் உணவு மற்றும் மன கட்டுப்பாட்டால் சரிசெய்யலாம்.
ரத்த அழுத்தத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?
🌀 தினமும் டீ, காபி குடிப்பதை தவிர்த்து, 1 டம்ளர் மோரில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து குடித்து வந்தால், இரத்த அழுத்தம் விரைவில் குறையும்.
🌀 முருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து, அதை உலர்த்தி பொடியாக்கி, தினமும் இரண்டு வேளைகள் 2 கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம் குறையும்.
🌀 வெந்தயம், பாசிபயறு, கோதுமை, ஆகியவற்றை சிறிதளவு எடுத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதனுடன் மிளகு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறையும்.
🌀 அருகம்புல்லை நன்கு சுத்தம் செய்து, அதன் சாறு எடுத்து அதனுடன் ஐந்து பங்கு சுத்தமான தண்ணீர் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தம் குறையும்.
🌀 அரைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, அதை உலர்த்திப் பொடியாக்கி, தினமும் இரண்டு வேளைகள் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறைந்துவிடும்.
🌀 நமது உடல் நலனில் நாம் தனி கவனம் செலுத்த வேண்டும். முறையான தூக்கமும், நிறைவான மன அமைதியும் பல பிரச்சனைகளிலிருந்து நம்மை காக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...