Thursday, April 6, 2017

குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள்*

🌺 குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் மூலவர் கல்லிலோ வேறு உலோகம் கொண்டோ செய்யப்படவில்லை.
*பாதாள அஞ்சனம் எனும் கலவையால் செய்யப்பட்டது இச்சிலை.*

🌺 இந்த திருக்கோவிலில் கண்ணன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார்.
உருவத்தில் தான் குழந்தை ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன்.
*சித்திரை விஷு,ஓணம் பண்டிகை மற்றும் ஏகாதசி இங்கு முக்கியமான பண்டிகைகள்.*
🌺 *குழந்தைக்குப் முதல் முதலாக சோறு ஊட்டும் வைபவம் இங்கு மிகவும் சிறப்பு*
இந்த திருக்கோவிலில் இதை செய்தால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் கண்ணன் திருவருளால் உடல் ஆரோக்கியம் கொண்டு வளரும் என்பது நம்பிக்கை.
🌺 இந்த திருக்கோவிலில் பக்தர்களால் வழங்கப்பட்ட யானைகள் மிகவும் விஷேசம்.
*அந்த வகையில் பத்மநாபன், கஜ ராஜன், கேசவன் என்று பெயர் கொண்ட யானைகள் வரலாற்றில் இன்றும் சிறப்பு பெற்றவை ஆகும்.*
🌺 இந்த திருக்கோவில் நடை திறப்பின் பொழுது யானைகள் இடம் பெறுகின்றன.
திருவிழா காலங்களில் யானைகள் தான் சுவாமியை சுமந்து வரும். அதற்காக யானைகளுக்கு ஓட்ட பந்தயம் நடத்தப்படும்.
*வெற்றி பெரும் யானை தான் சுவாமியை சுமக்கும் பாக்கியம் பெறும்.*
🌺 இந்த திருக்கோவிலில் ஸ்வாமி சன்னதி காலை 3 மணிக்கு திறக்கப்படும்.
முதல் நாள் அணிந்த மாலைகளுடன் மற்றும் அலங்காரத்துடன் பூஜை நடத்தப்படும்.
இதனை நிர்மால்ய பூஜை என்பார்கள். பின்னர் திருமஞ்சனம் கண்டு மகிழ்வார் கண்ணன்.
🌺 நாராயண பட்டத்திரி சமஸ்கிருதத்தில் எழுதிய நூல் மற்றும் பூந்தானம் என்ற மஹான் எழுதிய ஞானப்பானை என்ற மலையாள நூல் இந்த ஸ்தல சிறப்பினை விளக்குகிறது.
🌺 இந்த ஸ்தலத்தில் உள்ள துலாபாரம் சிறப்பு எண்ணில் அடங்கா.
பக்தர்கள் கண்ணனை பிரார்த்தனை செய்து அது நிறைவு பெற்றவுடன் துலாபாரத்திக்ல் பழங்கள் , பொருள், காசுகள் என்று எடைக்கு எடை காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
🌺 *குரு பகவானும், வாயு பகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் தான் இந்த சிறப்பு பெற்ற குருவாயூர்.*
கண்ணன் இவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் கண்ணன் இந்த ஊருக்கு தனது பெயரை சூட்டி கொள்ளாமல்,
*குரு+ வாயு சேர்த்து குருவாயூர் என பெயர் பெற்றது.*
இந்த புகழ் பெற்ற திருஸ்தலம் கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
🌺 *கிருஷ்ணாட்டம் இங்கு மிகவும் சிறப்பு பெற்றவை.*
இரவு ஸ்வாமி சன்னதி நடை அடைத்த பிறகு தொடங்கி, காலையில் நடை திறப்பிற்கு முன்பும் ஆடி முடிக்கும் ஆட்டமே கிருஷ்ணாட்டம்.
மயில் பீலியை கொண்டு கிரீடம் செய்து ஆடுவார்கள்.
*இது கண்ணனுக்கு மிகவும் பிடித்த ஆட்டம் ஆகும்.*
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா...*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...