1987ம் ஆண்ட ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பி வந்தார் இளையராஜா. அப்பொழுது அவருடைய கடைக்குட்டி மகன் யுவன் ஓடோடி வந்து, டாடி நான் ஒரு ட்யூன் போட்டிருக்கிறேன் சரியாக இருக்கிறதா பாருங்கள்" என்றான்.
நீ ட்யூன் போட்டிருக்கிறாயா? என்று வியப்போடு கேட்ட இளையராஜா, எங்கே போடு பார்க்கலாம்" என்றவாறே மகனின் ட்யூனைக் கேட்டார். என்ன ஆச்சரியம் ராஜாவின் ட்யூனைப் போலவே யுவன் போட்டிருந்த ட்யூனும் இருந்தது. அதை சிவாஜி புரொடக்ஷன்ஸ் ‘ஆனந்த்’ படத்தில் அப்படியே பயன்படுத்திக்கொண்டார் இளையராஜா.
‘ஆனந்த்’ படத்தில் வரும் பூவுக்குப் பூவாலே மேடை கட்டி" என்ற முதல் பாடல் அந்த இளம் இசையமைப்பாளனான யுவன் போட்ட ட்யூன்படி உருவான பாடல் தான்.
அவர் அருகில் இருப்பவர்களுக்கு புரியும்! – பார்த்திபன்
சமீபத்தில், ”நான் லாங் டிரைவ் போகும்போதெல்லாம் கேட்கிறது ராஜா சார் பாட்டுதான்” என்று ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லியிருந்தார். சிலர், சினிமாத்துறையில் கால் பதிச்சுட்டு, வந்த தடமே தெரியாம காணாமப் போயிடுவாங்க. ஆனா, ராஜா சார் சூரியன் மாதிரி. இரவு பகல் மாறிமாறி வந்தாலும், சூரியன் இருந்துக்கிட்டேதான் இருக்கும்.
அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், நான் ஓரினச் சேர்க்கையாளன்’னு பேசினேன். அங்கிருந்த எல்லோரும் திகைச்சுட்டாங்க. ராஜா சார்கூட, ‘என்னடா இவன்… இப்படி பேசுறானே!’ என்பது போல பார்த்தார். ராஜா சார் பாடலைக் கேட்கக் கேட்க, நாம் அவரை நேசிக்கத் தொடங்கிடுவோம். காதலிக்க எப்படி ஆண், பெண் பேதம் தேவையில்லையோ, அது மாதிரி அவருடைய இசைதான் எங்களை அவரிடம் இணைக்குது. அது ஒன்றே போதும்…. ராஜாவைக் காதலிக்க…!
உண்மையைச் சொல்லணும்னா, ஒரு காரில் ஸ்டீயரிங் எப்படிக் கட்டாயமாக இருக்குமோ, அதே மாதிரி ராஜா சார் இசைத்தட்டும் கட்டாயமாக அதில் இருக்கும். சனிக்கிழமைக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை வர்ற மாதிரி, எனக்கு படத்தின் வேலை இருக்கோ இல்லையோ, அவரைச் சந்திக்கிறதை வாடிக்கையா வச்சிருக்கேன். அப்படி ஒரு சந்திப்பில்தான், ‘ஆயிரம் படங்கள் எப்படி முடிஞ்சது’னு கேட்டேன். வெறும் கையை விரித்து, புன்னகைத்தார்.
ராஜா சார் இசை அமைத்து, எம்.எஸ்.வி. போன்ற ஜாம்பவான்களே சிலாகிச்ச ‘அப்படிப் பாக்கிறதெல்லாம் வேணாம்…’ பாடல் என் படத்தில் அமைந்ததில், ஒரு குட்டிப் பிள்ளையோட பெருமை எனக்கு உண்டு. கடந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வாங்கியதில் ‘விப்லாஷ்’ என்ற படமும் ஒன்று. அவருடனான ஒரு சந்திப்பின்போது, ‘விப்லாஷ்’ படம் குறித்துப்பேசினேன்.
‘விரல் வச்சு வாசிச்சாங்களா… இல்ல, வாசிச்சுட்டு விரல் வச்சாங்களானு தெரியல. அப்படி ஒரு அற்புதம், அதனுடைய இசைக் கோர்ப்பு’ எனப் புகழ்ந்தார். ‘ராஜா சார் எதையும், யாரையும் புகழமாட்டார்’ என்று நினைக்கிறவங்களுக்கு, இது ஒரு உதாரணம். ‘கற்றோரைக் கற்றோரே காமுறுவர்’ இல்லையா? ராஜா சார் யார் என்பதை, அவர் அருகில் இருந்து பார்ப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்’ என சிலாகிக்கிறார் இயக்குநரும் நடிகருமான ரா.பார்த்திபன்...!
No comments:
Post a Comment