இந்து தர்மப்படி எந்த திசை நோக்கி சாப்பிட்டால் என்னமாதிரியான பலன்கள் ஏற்படும்?
இந்து தர்மப்படி எந்த திசை நோக்கி சாப்பிட்டால் என்னமாதிரியான பலன்கள் ஏற்படும்?
இந்து தர்மப்படி ஒருவன் வாழ்ந்து வந்தால் எவனுக்கு வாழும்போதே கல்வி, செல்வம் அழியாத
புகழ், மனநிறைவு போன்றவை ஏற்படும். அதன் அடிப்படையில் ஒருவன் எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் என்னமாதிரியான பலன்கள் கிட்டும் என்பதை இங்கு காண்போம்.
ஒருவன் தனது வீட்டில் . . .
ஒருவன் தனது வீட்டில் . . .
கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் அவனது கல்வி வளரும்.
மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டுவந்தால் அவனுக்கு செல்வம் பெருகும்.
வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டுவந்தால் அவனுக்கு நோய் வளரும்.
தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டுவந்தால் அவனுக்கு அழியாத புகழ் உண்டாகும்.
இது எப்படி சாத்தியம்?
கிழக்கு திசை இந்திரனுக்கு உரியது.
மேற்கு செல்வத்தின் அதிபதியாகிய மகாலட்சுமிக்கு உரியது.
வடக்கு சிவனுக்கு உரியது.
தெற்கு யமனுக்கு உரியது.
தனது வீட்டைத் தவிர,ஒருவன் தனது உறவினர் நண்பர்கள் வீட்டில் சாப்பிட நேர்ந்தால்
அவன் மேற்கு திசையைநோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் அந்த நண்பன் அல்லது உறவினர் நட்பு கெட்டு-பகையாகிவிடும்.
No comments:
Post a Comment