Sunday, April 2, 2017

ஒருவரது ஆரோக்கியத்தை மேம்படுத்த போதுமானது.



தினமும் 15 நிமிடம் வாக்கிங் மேற்கொள்வதால் உடலினுள் நிகழும் மாற்றங்கள் குறித்து தெரியுமா? - தெரிந்துகொள்வோம்
உடலுழைப்பற்ற வாழ்க்கை முறையால் பல தீவிர உடல்நல பிரச்சனைகளால் அவஸ்தைப்பட நேரிடுகிறது. உடலுழைப்பு இருந்தால் தான், உடலின் ஒட்டுமொத்த உறுப்புக்களிலும் இரத்த ஓட்டம் அதிகரித்து, உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருக்கும். உடலினுள் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க உடற்பயிற்சி மிகவும் சிறந்த வழி.
பலர் உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று கூறுவார்கள். ஆனால் கடுமையான உடற்பயிற்சியால் தான் உடலில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க முடியும் என்பதில்லை. லேசான 15 நிமிட வாக்கிங் பயிற்சியே ஒருவரது ஆரோக்கியத்தை மேம்படுத்த போதுமானது.
நன்மை #1
சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் வாக்கிங் மேற்கொள்ளுங்கள். அதிலும் 15 நிமிட வாக்கிங் சர்க்கரை நோயைத் தடுக்கும்.
நன்மை #2
உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமெனில், தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இதனால் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
நன்மை #3
தினமும் அதிகாலையில் 15 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம், உடலில் வைட்டமின் டி-யின் அளவை அதிகரிக்கலாம்.
நன்மை #4
குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றைத் தடுக்க 15 நிமிட வாக்கிங் பயிற்சி உதவும்.
நன்மை #5
தினமும் 15 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
நன்மை #6
முக்கியமாக மன அழுத்தம் ஏற்படாமல், மனநிலை சிறப்பாக இருக்க 15 நிமிட நடைப்பயிற்சி உதவியாக இருக்கும்.
Image may contain: 1 person, smiling, standing, outdoor and nature

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...