Wednesday, April 5, 2017

ஆறுதலான செய்தி !!!!

பெங்களூரைச் சேர்ந்த, சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், .
"சசிகலா சிறையிலடைக்கப்பட்டது முதல், சசிகலாவை, யார் யார்,எப்போது, எந்த நேரத்தில் சந்தித்து பேசினர்" என, ,சிறைத் துறையினரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
சிறை விதிமுறைப்படி, குற்றவாளியை, 15 நாட்களுக்கு ஒருமுறை, ஒருவர் மட்டும் சந்திக்க அனுமதிக்க வேண்டும். அதுவும், காலை, 11:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை மட்டுமே, இந்த சந்திப்பு இருக்க வேண்டும்.அதன்படி பார்த்தால், மூன்று பேர் மட்டுமே,
சசிகலாவை சந்தித்திருக்க வேண்டும்.
ஆனால், சிறை நிர்வாகம் அளித்த பட்டியலில்,
சசிகலாவை, 14 பேர் சந்தித்துள்ளனர்.
இதில் சிலர்,அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி
சந்தித்து இருக்கிறார்கள்.சட்டத்தை மீறி
அனுமதி அளித்த அதிகாரிகள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்ட
அமைச்சகத் துக்கும், சிறைத் துறை, ஐ.ஜி.,க்கும்
கடிதம் எழுதியிருக்கிறார்.நடவடிக்கை
இல்லையென்றால் உயர்நீதி மன்றத்தை
நாடப் போவதாக அறிவித்து இருக்கிறார்.....
**நாமெல்லாம் மறந்தால் கூட அங்கிருப்பவர்கள்
கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்
என்பது ஆறுதலான செய்தி !!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...