வணக்கம் கார்த்திகை செல்வன் ,
தமிழக மக்களின் உள்ளத்தில் ஒரு ஊடகவியலாளராக சிறந்த நெறியாளராக , பத்திரிகையாளராக நிரந்திர இடம் பிடித்துள்ளீர்கள் . உங்களின் வெற்றிக்கு தமிழகத்தில் உள்ள அணைத்து மக்களின் உள்ளத்தில் இருந்தும் வாழ்த்துகள் உங்கள் வாசல் தேடி வந்துகொண்டிருகின்றது . மகிழ்ச்சி .
அரசியல் விவாதங்களுக்கு அப்பாற்பட்டு , ஒரு சாமானியனின் வாழ்வியல் முறை மற்றும் வேளாண் குடிமக்களோடு தாங்கள் செய்த பயணம் , (நெடுவாசல், திருவாரூர் கீழ கூத்தன்குடி ) மற்றும் ஜல்லிக்கட்டு மெரினா விவாத மேடை உங்களை அணைத்து தமிழ் உள்ளங்களிலும் கொண்டு சேர்த்துள்ளது.
உங்களிடம் பிடித்தது ஆணவம் இல்லாத ஆளுமை , நெறியாள்கை, உங்களிடம் எதிர் கருத்து கொண்டு விவாதம் செய்பவர் கூட உங்களை விரும்புவார் . விவாதத்தில் கருத்துகளுக்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட விமர்சனம் செய்பவரைக்கூட அவர் கூறிய கருத்தை அவரையே திரும்ப பெற செய்வீர்கள் .
தமிழக மக்களின் எண்ண ஓட்டங்களை உங்களின் குரலால் ஊடகத்தில் எழுப்புவீர்கள் , தாங்கள் நடத்திய அணைத்து விவாத மேடைகளும் , நேர்பட பேசு நிகழ்ச்சிகளும் தனிசிறப்புதான் .
தமிழக மக்களின் தமிழ் செல்வனாகிய எங்கள் கார்த்திகை செல்வன் என்றென்றும் நடுநிலை தவறாத நக்கீரர் போல வெற்றிசெல்வனாக திகழ வேண்டும். தங்கள் வெற்றி பயணம் தொடரட்டும்.....
வாழ்த்துகள் .
Thank You so much for this write up. Just now read it. Thanks again.
ReplyDelete