Sunday, April 2, 2017

எந்த பொருளாதார நிபுணரும் ஏற்கமாட்டார். அது முழு முட்டாள் தனம்.

விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எந்த பொருளாதார நிபுணரும் ஏற்கமாட்டார். அது முழு முட்டாள் தனம்.
RBI முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், இதை பல முறை கடுமையாக கண்டித்து உள்ளார். விவசாய கடனோ எந்த கடனோ தள்ளுபடி செய்வதென்பது வங்கி என்ற கட்டமைப்பின் அடிப்படையை குலைப்பது.
மேலும், விவசாய கடன் நாட்டில் ஊழல் நடக்கும் இடங்களில் முதல் இடம். தரிசு நிலதிற்கு விவசாய கடன் வாங்குவது; ஒரே பட்டா எண்ணை கொண்டு பல இடங்களில் கடன் வாங்குவது; நிச்சயம் அடுத்து வரும் ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடி நடக்கும் என, கடன் மேல் கடன் வாங்கி வைத்து விட்டு பின்னர் அதை அடுத்த வரும் ஆட்சி தள்ளுபடி செய்வது தொடர்கதை.
இதில் பயன் அடைவது நில உரிமையாளர்கள், பல ஏக்கர் நிலம் வைத்து உள்ளோரும்தான்.
கூட்டுறவு வங்கி கடன் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோருவது தான் உண்மையான விவசாயிகள் மேல் அக்கறை உள்ள போராட்டம்.
அந்த கோரிக்கை எல்லாம் அய்யாகன்னு வைக்கவே இல்லை...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...