தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி டிகுன்ஹா தீர்ப்பளித்துள்ளார். மேலும் அவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்..
சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், தலா ரூ.10 கோடி அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். மூன்று நீதிமன்றங்களையும், 14 நீதிபதிகளையும், எண்ணற்ற அரசு வழக்கறிஞர்களையும், கொண்டு கர்நாடகா பங்களூரில் உள்ள பார்ப்பன அக்கிரஹாரத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
சிந்திக்கவும்: இந்த அதிரடி தீர்ப்பு சரிதானா? ஜெயலிதா கொள்ளைக்காரி, பூலாந்தேவி என்றால் முந்தைய தமிழக முதல்வர் கருணாநிதி யார்? சர்கார் கமிஷன் சொன்ன நவீன ஊழல்வாதி இவர் என்பது உலகறிந்த உண்மை. இவர் மஞ்சள் பையோடு கள்ள ரயில் ஏறி சென்னைக்கு வந்தவர். இப்படிப்பட்டவரின் குடும்பம்தான் இன்று ஆசியாவிலேயே 7வது பணக்காரர்கள் லிஸ்டில் உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அடுத்து பாசிதம்பரம் முதல் மற்றைய குட்டி கொள்ளையர்கள் ஆகிய நமது அரசியல்வாதிகளையும் மண் கொள்ளை முதல் கல்குவாரி கொள்ளை வரை நடத்தும் நமது கார்பரேட் கொள்ளையர்கள் பற்றி என்ன சொல்வது? இவர்களை தண்டிப்பது யார்>
இவர்கள் விசயத்தில் எல்லாம் அதிரடி தீர்ப்புகள் வெளிவர வில்லையே ஏன்? இதற்க்கு முன் எந்த அரசியல்வாதிக்கும் 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது இல்லையே! கடந்த தேர்தலில் தமிழகத்தில் காலூன்ற நினைத்தது பாரதிய ஜனதா கட்சி. ஜெயலலிதா தங்களை கூட்டு சேர்த்து கொள்வார் என்று நம்பி ஏமாந்து போனது. ஜெயலலிதா ஒன்றும் ஹிந்துதுவாவுக்கு எதிரானவர் இல்லை என்றாலும் அவர் இருக்கும் வரை தமிழகத்தில் காலூன்ற முடியாது என்கிற நிலையே பாரதிய ஜனதாவுக்கு இன்று ஏற்ப்பட்டுள்ளது. தமிழக திராவிட கட்சிகளுக்குள் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினர் என்றோ ஊடுருவி விட்டனர்.
திமுக மற்றும் ஏனைய கட்சிகளை காட்டிலும் அதிமுகவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் வெகு அதிகமாக ஊடுருவி உள்ளனர். சுருங்க சொல்லவேண்டும் என்றால் அதிமுகவில் தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை என்று மிக அதிக அளவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ஊடுருவி உள்ளனர். அதன் நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிமுகவை அப்படியே அபகரித்து கொள்வதோ அல்லது அந்த கட்சியை தங்களது தமிழக பினாமி கட்சியாக்குவதோதான் அதன் உண்மையான நோக்கம். பெரியார் பிறந்த மண்ணில் ஹிந்துத்துவா தனது பெயரில் கட்சி வளர்க்க முடியாது என்பதை புரிந்து கொண்ட இவர்கள் எம்.ஜி.ஆர் காலத்திலேயே இந்த சதி திட்டத்தை தொடங்கி விட்டனர்.
இப்பொழுது மேலே மோடி ஆட்சி வந்ததும் அந்த நீண்டகால திட்டத்தை செயல்படுத்த சாதகமான சூழல் வந்துள்ளது. இந்த தருணத்தில் ஜெயலிதாவை ஜெயிலுக்கு அனுப்புவதன் மூலமோ அல்லது அவரை அந்த கட்சியில் இருந்து ஓரம் கட்ட வைப்பதன் மூலமோ கொண்டு அதிமுகவை கைப்பற்றுவதன் மூலம் தமிழகத்தில் காலூன்றுவதே அவர்களது உண்மையான நோக்கம்.
No comments:
Post a Comment