அன்ன வாகன தத்துவம் : வேதத்தில் சரஸ்வதிக்கு வாகனமாக அன்னம் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலையும், தண்ணீரையும் கலந்து வைத்தாலும், நீரை விட்டு விட்டு பாலை மட்டும் அருந்தும் அன்னத்தைப் போல, உலகில் நன்மை, தீமை இரண்டும் கலந்திருந்தாலும், தீமையை விடுத்து, நன்மையை மட்டும் மனிதன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இதன் தத்துவம். தென்னகத்தில் சரஸ்வதிக்குரிய வாகனம் மயில்.
இதன் தோகையில் வட்டவடிவில் கண்கள் இடம்பெற்றிருக்கும். படிப்பவன், இரு கண்களால் மட்டும் இல்லாமல் ஆயிரமாயிரம் கண்களோடு, புதியவற்றைக்கற்றுத் தெளிய வேண்டும் என்பது இதன் தத்துவம்.அன்னத்தில் இருக்கும் சரஸ்வதியை "ஹம்ஸ வாஹினி' என்றும், மயில் மீதிருக்கும் சரஸ்வதியை "வர்ஹ வாஹினி' என்றும் அழைப்பர். ரவிவர்மா ஓவியங்களில் சரஸ்வதிக்கு மயிலே வாகனமாக உள்ளது.ஐந்து கலைமகள்: மகாசரஸ்வதி, வீணா சரஸ்வதி, வஜ்ர சாரதா, ஆர்ய சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி என்னும் ஐந்துவகை கலைமகள் வழிபாடு புத்த
சமயத்தில் இடம் பெற்றுள்ளது. மகாசரஸ்வதி வெண்மை நிறம் கொண்டவள். இரு கரங்களிலும் வீணை ஏந்தி, வலதுகரத்தில் அபய முத்திரையும், இடக்கரத்தில் வெண் தாமரையும் இடம் பெற்றிருக்கும். வஜ்ர வீணா சரஸ்வதி
கல்வியை வழங்குபவளாக தன் இருகரங்களில் வீணையைத் தாங்கியபடி இருக்கிறாள். வஜ்ர சாரதா இடதுகையில் புத்தகமும், வலதுகையில் தாமரை மலரும் வைத்திருக்கிறாள்.
ஆர்ய சரஸ்வதி வழிபாடு நேபாளத்தில் காணப்படும் வடிவம். வலதுகரத்தில் செந்தாமரை மலரும், இடக்கரத்தில் புத்தகமும் தாங்கி இருக்கிறாள். வஜ்ர சரஸ்வதி மூன்று முகங்களையும், ஆறு கரங்களையும் கொண்டவளாகத் திகழ்கிறாள். இந்த தேவியின் கரங்களில் தாமரை, சுவடி, கத்தி, கபாலம், கரம், கலசம் ஏந்தியிருப்பாள். இவளை புத்தமதத்தினர் "மஜ்ஞúஸ்ரீ'என அழைப்பர்.
சரஸ்வதி பூஜையன்று பக்தியுடன் இந்த வழிபாட்டை படிப்பவர்கள் சரஸ்வதிஅருளால் கல்வி, தொழில் வளர்ச்சி
பெறுவர்.
* ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் அருளும் கலைமகளே! வெண்பளிங்கு போல தூய வடிவம் கொண்டவளே! மணம் கமழ்கின்ற தாமரை போன்ற மலர்க்கரம் பெற்றவளே! நல்லவர் நாவில் குடிகொண்டவளே! உன்
திருவடிகளைச் சரணடைகின்றோம்.
* வெண்தாமரை மலரில் வீற்றிருப்பவளே! கவிஞர் பாடும் பாமாலையில் மனம் மகிழ்பவளே! சிருஷ்டிக்கடவுளான பிரம்மதேவனின் துணைவியே! கையில் ஜபமாலை தாங்கியிருப்பவளே! வீணை இசைப்பதில் மனம்
மகிழ்பவளே! எங்கள் வாழ்வு மலர நீ துணை நிற்க வேண்டும்.
* வேதம் நான்கினுக்கும் வித்தாக இருப்பவளே! மூங்கில் போன்ற தோள்களைக் கொண்டவளே! வெள்ளை அன்னத்தை வாகனமாக உடையவளே! குயில் போன்ற இனிய குரலும், இளமான் போன்ற சாயலும் கொண்டவளே! உன்னருளால் எங்களுக்கு வாக்கு வன்மை உண்டாக வேண்டும்.
* திருவடியைப் பணிந்தவர்க்கு கலைஞானம் அருளும் சரஸ்வதியே! சகல கலாவல்லியே! வித்தையின்
இருப்பிடமே! மேதா விலாசமே!அறியாமை போக்கும் அறிவின் சுடரே! கலைப்பெட்டகமே! வேதநாயகியே! நீயே சிறந்த கல்வியறிவும், அதற்குரிய புகழ்மிக்க வாழ்வும்தந்தருள வேண்டும்.

No comments:
Post a Comment