Sunday, December 18, 2016

இனி அனைத்து பங்குகளிலுமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இன்று எனது வண்டிக்கு பெட்ரோல் போடச் சென்றேன். முகநூலில் சமீபத்தில் பார்த்த ஒரு பதிவு நினைவுக்கு வர.... ரூ.100க்குப் பெட்ரோல் போடுங்க. செட் செய்துவிட்டு Gunஐ லாக் செய்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு மீட்டரையும், பெட்ரோல் போடும் நபரின் கையையும் மாறி மாறி கவனித்தேன்.
சுமார் ரூ.50ஐத் தாண்டும் போது, பெட்ரோல் போடும் நபர், தனது விரலால் Petrol Gun Lock-ஐ அழுத்தினார். அவ்வாறு செய்யும்போது மீட்டர் மட்டும் ஒடும்.... ஆனால் பெட்ரோல் வராது. இதனால் சுமார் கால் லிட்டர் பெட்ரோலுக்கும் மேல் கொள்ளை அடிப்பார்களாம். இது அநேக பங்குகளில் நடப்பதாக முகநூல் பதிவில் இருந்தது.
பிறகு அந்த நபரிடம் ரூ.100க்கு செட் செய்தீர்களே முடியும் முன்பே ஏன் கன் மீது கை வைக்கிறீர்கள் என்று கேட்டுப் பிரச்சனை ஆனதும், மேனேஜர் உட்பட ஊழியர்கள் கூடிவிட்டனர். அது முடிந்தால் அதுவாக ஆட்டோமெடிக்காக லாக் ஆகப்போகுது. நீங்கள் எதற்கு லாக் அழுத்தினீர்கள் என சண்டையிட்டதும் அடுத்து வந்தவர்களுக்கெல்லாம் அதுவாக லாக் ஆகும் வரை பெட்ரோல் போட்டு நல்லவர் போல் நாடகமாடினார். மீண்டும் கொஞ்சம்நேரம் பொறுத்து அதே திருட்டு வேலை செய்வார்கள்.
எனக்குப் பெட்ரோல் போட்ட நபர் ஐயப்ப சாமிக்கு மாலை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரூபாயை செட் செய்துவிட்டு Gunஐ லாக் செய்துவிடுங்கள் என்று பெட்ரோல் போடும் முன்னரே கூறினாலும் அதனை அவர்கள் காதில் போட்டுக்கொள்வதே இல்லை. இதை வாணியம்பாடியில் உள்ள அனைத்துப் பெட்ரோல் பங்குகளிலுமே பார்த்தாகிவிட்டது.
இனி அனைத்து பங்குகளிலுமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இனி பெட்ரோல் போடச் செல்லும்போது நீங்களும் கவனித்துப் பாருங்கள்.!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...