Sunday, December 18, 2016

💑 திருமணம் செய்யலாமா?- சகுனம் சொன்ன பதில்💑

 வாடிக்கையாளர் தனது பெண்ணின் ஜாதகத்தை எடுத்து வந்து ,
தனது பெண் ஒருவரை சில வருடங்களாக விரும்புகிறார், திருமணம் செய்தால் அவரைத் தான் செய்வேன் என்று அடம் பிடிக்கிறார், எனவே நாங்களும் சம்மதித்துவிட்டோம், இருந்தாலும் எங்களுக்கு பயமாக உள்ளது, பெண்ணின் ஜாதக ரீதியாக இது போன்ற அமைப்பு உள்ளதா?
திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா? என்று பெண்ணின் ஜாதகத்தை பார்த்து சொல்லுமாறு கேட்டார்,
👨‍❤️‍👨 பெண்ணின் ஜாதகத்தை பார்த்த போது அது போன்ற அமைப்பும் இருந்தது,
(அது பற்றி இங்கு விளக்கம் வேண்டாம் என்பதால் அந்த விளக்கத்தை இங்கு குறிப்பிடவில்லை)
மேலும் களத்திர பாவம் நன்றாக இருந்த காரணத்தால் திருமண வாழ்க்கை நன்றாகவே அமையும்...... என்று சொல்லிக் கொண்டிருந்தேன்,
அப்போது எனது தம்பி ( சித்தி பையன் ) யிடமிருந்து போன் வந்தது.
(அவர் நேற்று இரவு புதுக்கோட்டை அருகே எனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக என்னிடம் சொல்லியிருந்தார்,
ஊருக்கு சென்று விட்டாரா? என விசாரிக்க இன்று காலை போன் செய்தேன், ஆனால் அவர் அப்போது போனை எடுக்கவில்லை )
காலையில் போன் செய்திருந்தீர்களே என்ன விஷயம்? என்றார், நான் ஊருக்கு சென்று விட்டீர்களா என விசாரிக்க தான் போன் செய்தேன் என்றேன்,
காலையில் ஊருக்கு வந்து சேர்ந்தோம்,
இப்போது தான் தனது உறவினர் மகன் விஜய்கணேஷுடன் பிள்ளையார்பட்டி கற்ப வினாயகர் கோயிலுக்கு சென்று வினாயகரை தரிசித்து விட்டு கோயிலிருந்து தான் உங்களுக்கு போன் செய்கிறேன் என்றார்,
🐘🐘🐘🐘சரி விஷயத்திற்கு வருவோம்,
📞 இங்கே கேள்வி - திருமணம் செய்யலாமா?
வந்த சகுனம் :-
விஜய்கணேஷ் என்பவருடன் கற்பக வினாயகரை தரிசித்த பின் கோயிலிலிருந்து அழைப்பு.
விஜய் / விஜயம் என்றால் வெற்றி,
விஜய்கணேஷ் என்றால் வெற்றியை அருளும் வினாயகர் என்று பொருள்,
 திருமணம் சம்மந்தமாக பேசும் போது கோயிலிலிருந்து யாரேனும் வந்தாலோ
கோயில் பிரசாதம் கொடுத்தாலோ /பிரசாதம் தபாலில் வந்தாலோ
 கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் அதாவது தரிசனம் செய்த மகிழ்ச்சியுடன் அழைத்தாலோ
........ நல்ல சகுனம்,
அதிலும் விஜய்கணேஷ் என்ற பெயர் உடையவரோடு கற்பக வினாயகர் ஆலயத்தில் இருந்து கொண்டு அழைத்தார்,
அழைத்தவர் வருத்தமான செய்தி எதுவும் சொல்லவில்லை,
தடைகளை அகற்றும் வினாயகர் கோயிலிலிருந்து வெற்றி அருளும் வினாயகர் பெயரை வைத்துள்ளவரை உடன் இருந்து அழைத்துள்ளார்,
திருமணம் செய்ய எந்த தடையும் இல்லை, நான் இருக்கிறேன் என்று வினாயகரே சொல்வது போல் அல்லவா உள்ளது,, இதை விட சிறந்த நிமித்தம் ஏது???
......... இது போல நமது அன்றாட செயல்களை உற்று நோக்கினால் இறைவன் அளிக்கும் பதில்களை நாம் உணர முடியும்🙏🏿

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...