Tuesday, December 20, 2016

கேவலம் பணத்திற்காகவும், பதவிக்காகவும் கும்பிடு குருசாமிக்களாக மாறிவிட்டனர்.

நடப்பது எதுவும் நல்லதற்கு இல்லை.
மத்திய அரசு மெல்ல தன் பிடியை இறுக்க ஆரம்பித்து விட்டது.
இங்கு எவர்க்கும் மத்திய அரசை கண்டிக்கும் திராணியும் இல்லை.
திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களை முதல்வராக செயல்பட விடாமல் தடுத்து கொண்டிருக்கின்றன ஆதிக்க சக்திகள்.
கேவலம் பணத்திற்காகவும், பதவிக்காகவும் கும்பிடு குருசாமிக்களாக மாறிவிட்டனர்.
கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து பல்பு வாங்கிய பிரதமர் மோடி தமிழக அதிமுக அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்.
அம்மா இருந்திருந்தால் இவை எதுவுமே நடந்திருக்காது.மோடி மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் போய் செல்பி எடுத்துக்கொண்டிருந்திருப்பார்.
எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டார்கள்.
இப்போது மோடி செய்வதெல்லாம் நல்லதா கெட்டதா என்று தெரியாது.அதை தெரிந்து கொள்ள சில மாதங்கள் ஆகும்.
ஆனால் அம்மாவிற்கும் மோடிக்கும் பரஸ்பரமான உண்மையான நட்பு உண்டு.தன் தோழிக்கு என்ன நேர்ந்தது என்று அறிய மோடியும் முயற்சிக்கிறார் என்று தோன்றுகிறது.அதேசமயம் இதன் மூலம் அரசியல் ஆதாயம் அடையவும் மோடி திட்டமிட்டுள்ளது தெளிவாக தெரிகிறது.
மோடியின் இப்போதைய முடிவு
"பாம்பும் சாகவேண்டும்"
"கோலும் உடையக்கூடாது"
என்பதேதான்.
அம்மாவின் மீது உண்மையான நட்போடு பிரதமர் மோடி பழகியிருந்ததால் அவர் நல்லதைதான் செய்வார் என்று நம்புவோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...