ஜெயா டிவியில், "ஜாக்பாட் நிகழ்ச்சி" நடத்திய போது, எனது மூத்த மகளுக்கு முதலாவது பிறந்த நாள். அம்மாவிடம் ஆசி வாங்குவதற்காக குடும்பத்துடன் அவர் இல்லத்திற்கு சென்றிருந்தேன்.
"அம்மாவைப் பார்த்ததும் காலில் விழுந்து ஆசி வாங்கு, அது தான் எல்லாரும் செய்வது" , என்று கணவர் சுந்தர்சி. சொன்ன போது அவரிடம் நான் கூறியது " நெவர்" என்ற பதில் தான்.
ஆனால்,,, கதவைத் திறந்து உள்ளே சென்ற போது அம்மா எங்கள் எதிரிலேயே நின்று கொண்டிருந்தார்.. எனக்குள் ஏதோ அமானுஷ்யம் புகுந்து விட்டதைப் போன்ற உணர்வு... ஓடோடிச் சென்று என்னை அறியாமலே அவர் காலில் விழுந்து விட்டேன்.. ஒரு "மகாலக்ஷ்மியைப்" பார்ப்பதைப் போல் இருந்தது.
உலகத்திலேயே அவரைப் போன்ற அழகு யாருக்கும் இல்லை. அவரை "ஸ்டிராங்க் லேடி" என்று சொல்வார்கள்.. ஆனால், பழகியவருக்குத் தான் தெரியும் அந்த இரும்பு மனுஷியிடம் "கருணையும்" நிறைந்து இருந்தது.
அரசியல் ரீதியாக அவரை எதிர்த்து இருக்கிறேன் ஆனாலும் பெண்களுக்கு முன் உதாரணமாக இருந்தவர் முதல்வர் அம்மா.. அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது - நடிகை குஷ்பு
(Note: நடிகை குஷ்பு அரசியலில் முரண்பட்டு இருந்தாலும், அம்மா பற்றி சொன்ன கருத்து அருமையாக இருந்ததால் பதிவு செய்கிறேன்.)
No comments:
Post a Comment