Tuesday, December 20, 2016

மத தலைவர்களை எப்படி நாகரிகமாக, அன்போடு , பாசத்தோடு அழைத்தார்ன்னு பார்ப்போம்

நாகரீகத்திற்கு பெயர் போன திமுக தலைவர்கள், நாகரீகம் தவறி பேசியதாக சொல்ல முடியுமா? பொங்கி எழுந்துட்டாப்ல நியுஸ்7 விவாதத்தில் திமுகவின் பலராமன்.
சரி அப்படி என்ன நாகரீகம்?ன்னு யோசிச்சுப்பார்த்தால், தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் எல்லாம் கண்முன்னால் வந்துட்டு போறாங்க. சரி , மேடைப்பேச்சாளர்கள் அப்படி தான் என நினைச்சு விட்டுருவோம். அந்த கட்சி தலைவர் கருணாநிதி, எதிர் கட்சி தலைவர்களை, மத தலைவர்களை எப்படி நாகரிகமாக, அன்போடு , பாசத்தோடு அழைத்தார்ன்னு பார்ப்போம்.
"செவிடன் ஜீவா
மந்தபுத்தி திருமா
பரதேசி அத்வானி
ஆக்டோபஸ் மோடி
பண்டாரம் வாஜ்பாய்
தரகர், தா.பாண்டியன்
நொண்டி ராமமூர்த்தி
கலாம் என்றால் கலகம்
ஓடுகாலி திருநாவுக்கரசு
காவடி கல்யாணசுந்தரம்
கள்ளத் தோணி வைகோ
வழிப்போக்கன் வாழப்பாடி
போதை நடிகர் விஜயகாந்த்
மூளை கோளாறு மூப்பனார்
பாவாடை நாடா அனந்தநாயகி
செல்லாக்காசு ஓ.பன்னீர் செல்வம்
கறுப்பன், கருத்திருமன், ஐஸ் புரூட் சம்பத்,
கம்யூனிஸ்ட் வேடதாரி ஜி.ராமகிருஷ்ணன்
*மலையாளி, கோமாளி, கூத்தாடி, எம்.ஜி.ஆர்
ஈ.வெ.ரா.,வை ஏமாற்றிய புறம்போக்கு, கி.வீரமணி
காந்தாரி, கவுதாரி, சூர்ப்பனகை, ஜெயலலிதா
அவசரக்குடுக்கை, வாய்க்கொழுப்பு, மரம் வெட்டி ராமதாஸ்"
இப்படிப்பட்ட நாகரீக வார்த்தைகளை, "திராவிடம் தந்த திரவியம் திருக்குவளை முத்துவேல் கருணாநிதி"யை விட யாரால் கையாள முடியும்?
"பருவப் பெண்களின் தோள்களில், கைபோட்டு பவனி வரும் காந்தி" என காந்தியை, 'முத்தமிழ் வித்தகர் கருணாநிதியை விட நாகரீகமாக யாரல் வர்ணிக்க முடியும்?
"நேருவோ, மனைவியை இழந்தவர், சிரிமாவோ பண்டாரநாயகாவோ கணவரை இழந்தவர். இருவரும், இரண்டு மணி நேரம் அப்படி என்ன பேசினர்?" என இது போன்ற ஐயப்பாடுகளை, உலக தமிழர்களின் அடையாளமாம் கருணாநிதியை தவிர யாரல் எழுப்ப முடியும்.
காஷ்மீரத்து பாப் வெட்டிய பாப்பாத்தி, விதவை, என பண்போடு இந்திரா காந்தியை அழைத்த "திருக்குவளை திலகம் கருணாநிதி", தனது கழக சாத்வீகவாதிகளால் இந்திரா காந்திக்கு கல் அபிஷேகம் செய்தும், அதனால் புடவையில் படிந்த ரத்தக் கறையை, அது இந்திராகாந்தியின் "மாதவிடாய் ரத்தம்"தான் என சொன்ன கலைஞரின் நாகரீகம் யாருக்கு வரும்?
"இந்திராவின் மருமகளே வருக" என பின்னாளில் கூட்டணி வைத்த சோனியாவையும் அவரது கணவரையும்,
"இதயத்தில் ஈரமில்லா இத்தாலிக்காரி சோனியா",
"வெளிநாட்டுக்காரியை மணந்த போபர்ஸ் புகழ் ராஜிவ்" என கூறி அன்றே பெருமைப்படுத்திய கலைஞரின் மாண்பு யாருக்கேனும் உண்டோ?
"சாணான், மரமேறி, பனைஏறி, எருமைத் தோலன், காண்டாமிருகத் தோலன், அண்டங்காக்கா, கட்டைப்பீடி காமராஜன்" என காமராஜருக்கு பல விருதுகள் கொடுத்து, 'பண்பில் தனக்கு நிகர் தானே, என பறைசாற்றியவர் தானை தலைவர் கருணாநிதி.
இத்தனை அடைமொழிகளை, நாகரீகம் கூறும் தமிழ் உலகிற்கு கொடுத்த சொம்மொழி வித்தகன், தமிழனை மட்டும் விட்டு வைப்பாரா...?
"மரமண்டைகள்
வாழை மட்டைகள்
சொரணை கெட்ட தமிழன்
சோற்றால் அடித்த பிண்டங்கள்"
இவ்வாறு தமிழனை பெருமை படுத்திய பெருமை கலைஞரை மட்டுமே சாரும்.
ராமன் ஒரு குடிகாரன்,
இந்து என்றால் திருடன்,
ராமன் எந்த எஞ்சினியரிங் காலேஜில் படித்தான்?
என வால்மீகிக்கே சவால் விட்ட , பண்பாளன் தான் , "நாகரிகத்தின் தொட்டில்" என கூறப்படும் தி.மு.க வின் தலைவர் கருணாநிதி என்பதனை தாழ்மையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...