"1991ம் ஆண்டில் நான் நிறைய விளம்பரங்கள் பண்ணிக்கிட்டிருந்தேன். விளம்பரங்களுக்கு இசையமைக்கிற ஒருத்தர், ‘நீ, ராஜாசார் கிட்ட பாடணுமான்னு? கேட்டார். யார்தான் வேண்டாம்னு சொல்வாங்க? வாய்ஸ் டெஸ்ட்டுக்காக பிரசாத் ஸ்டூடியோவுக்கு வர சொன்னாங்க. ராஜா சார் ரூம்ல இருந்த நிசப்தம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ராஜா சார் வெள்ளை டிரஸ்ஸுல இருந்தார்.
‘ஸ்கேல் செக்’ பண்ணிட்டு, மறுநாளே ‘நாடோடித்தென்றல்’ படப் பாடலை ரிக்கார்டிங்க் பண்ணிட்டாங்க. அந்த சமயத்திேல எனக்குத் தமிழ் தெரியாது. அதனால், அந்த படத்திலே எனக்கு இங்கிலீஷ் பாட்டு கொடுத்தார். அப்புறம், 1995ல ‘வீட்ல விசேஷங்க’ படத்துக்காக ஒரு பாட்டு பாடினேன். இசையில் நிறைய புது முயற்சிகளைக் கொண்டு வந்தவர். பின்னணி இசைக்கு கூட வாய்ஸை யூஸ் பண்ணிருக்கார்.
என்னோட ஆன்மிக வாழ்க்கையிலும் ரொம்ப முக்கியமானவர் ராஜா சார். அவருடன் ஏகப்பட்ட பேர் ரமண மகரிஷி ஆசிரமம் போயிருக்கோம். ராஜா சாரோட ரமணர் பாடல்களைக் கேட்டு, எங்களுக்கும் அவரைப் பிடித்துவிட்டது. அதன்பின், நாங்களும் அடிக்கடி ரமண மகரிஷி ஆசிரமம் போக ஆரம்பிச்சிட்டோம்". என்றார் மால்குடி சுபா...
No comments:
Post a Comment