Thursday, December 15, 2016

ஜெயலலிதா மரண‌ம் குறித்த அதிரவைக்கும் “அப்போலோ மர்மம்’ விரைவில் . . . – பீதியில் உறையும் வி.ஐ.பி.கள்

ஜெயலலிதா மரண‌ம் குறித்த அதிரவைக்கும் அப்போலோ மர்மம் விரைவில் . . . – பீதியில் உறையும் வி.ஐ.பி.கள்

ஜெயலலிதா மரண‌ம் குறித்த அதிரவைக்கும் ‘அப்போலோ மர்மம்’ விரைவில் . . . – பீதியில் உறையும் வி.ஐ.பி.கள்
உலகில் ஏன் நமது இந்தியாவில் நடக்கும் பல நிகழ்வுகளை மிகுந்த சந்தே கத்தையும், அதிர்ச்சியையும்
ஏற்படுத்துவதாக இருந்து வருகிறது. 

ஹேக்கிங்’  இந்த வார்த்தையே பலரை பீதியூட் டுவதாக மாறிவிட்டது. ‘ஹேக்கிங்’ என்பது நல்லது, கெட்டது இரண்டு செயல்களுக்கும் பயன்படுத்த முடியும். ஆனால் தற்சமயம், ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் திருடி, தனக்கு சாதகமாக்கி கொள்வதற்கே ஹேக்கிங் அதிகளவில் பயன் படுத்தப்படுகிறது.
லீஜியன் என ஹேக்கர் குழு இந்தியாவைப் பற்றி ஓர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதில், நாங்கள் ஹேக் செய்துள்ள, சில அரசியல் தகவ ல்களை வெளியிட்டால், இந்தியா மிகப் பெரும் குழப்பங்களைச் சந்திக்க நேரிடும் என்பதே அது.  
இந்த லீஜியன் ஹேக்கர் குழுதான், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலை வரான ராகுல்காந்தி, தொழிலதிபர் விஜய் மல்லையா, ஊடகவியலாளர் கள் பர்க்காதத் மற்றும் ரவிஷ்குமார் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளை முடக்கியுள்ளது. கணக்குக ளை முடக்கியதோடு அவர்களது பெயரில் தவறான தகவல்களையும் பதிந்துவிட்டது.
இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை (12-12-16), Washington Post பத்தி ரிகையின் வெளியுறவுச் செய்திகளைக் கண்காணி க்கும் மேக்ஸ் பேரக் தந்த செய்தி இன்னும் அதிர்ச்சி யானது.  லீஜியன் ஹேக்கிங் குழு இந்தியாவைக் குறிவைத்து பல முக்கிய பிரமுகர்களின் கணக்குக ளை முடக்குவது, அரசியல் கட்சிகளின் சமூக வலை தளங்களையும் கம்ப்யூட்டர்களையும் ஹேக் செய்து முக்கிய டேட்டாக்களை எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறதாம். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை எடுத்த அப்போலோ மருத்து வமனையின் சர்வரையும் ஹேக் செய் துள்ளனராம் இந்த லீஜியன் ஹேக்கர் குழுவினர். அப்போலோவில் அவர் களுக்குக் கிடைத்த சில தகவல்களை வெளியிட்டால் தமிழகத்தில் மட்டு மல்ல, இந்திய அளவில் மிகப் பெரிய அரசியல் குழப்பம் வரக்கூடுமாம்.
இந்தியாவிலிருந்து பல ஜிகாபைட்ஸ் அளவுள்ள தகவல்களைத்திருடியுள்ளனர். இந்திய அரசியல் தளங்களை ஹேக் செய்வதில் தொடக்கத்தில், இவர்களுக்கு ஆர்வமிருக்கவில்லை. ஆனால் கிடைத்த செய்திகளின் சுவாரஸ்யம் தொடர்ந்து திருட வைத்துள்ளது.  இதுவரை இந்தியாவில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்வர்கள் இந்த லீஜியன் ஹேக்கிங் குழுவால் ஹேக் செய்ய ப்பட்டுள்ளன.
மேலும், பர்க்கா தத்-தின் ட்விட்டர் கணக்கு மற்றும் மெயில்களிலிருந்து இதுவரை 1.2 ஜிகாபைட் அளவுகளில் தகவல்கள் திருடப்ப ட்டுள்ளனவாம் .  மேலும், அடுத்தகட்டமாக இந்திய அரசியல்வாதி லலித் மோடியின் கண க்குகளைத் திருட திட்டமிட்டிருக்கிறதாம் லீஜியன் ஹேக்கிங் குழு.  என,  அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டி ருக்கிறார் மேக்ஸ் பேரக்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...