மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை சந்திக்கச் சென்ற வை.கோ. அவர்கள் திமுக வினரால் தாக்கப்பட்டிருக்கிறார். திமுக வினரின் அரசியல் நாகரீகம் கலாச்சாரம் என்பது இதுதான்.
ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு எதிராக கடுமையான அரசியல் நடத்திய ஸ்டாலின், திருமாவளவன், வை.கோ. உட்பல பலர் அவரைப் பார்க்க மருத்துவமனைக்கு சென்றிருக்கின்றனர். அவர்கள் யாரும் அதிமுக வினரால் தாக்கப்பட்டதில்லை. அதே போல அவரது மரணத்திற்கு பிறகும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வை.கோ., கனிமொழி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக வினர் பலரும் ராஜாஜி ஹாலுக்கு வருகை தந்தபோதும் அவர்களுக்கு அதிமுக வினர் எவ்வித எதிர்ப்பும் காட்டாது கண்ணியம் காத்தனர்.
ஆனால், கருணாநிதியின் உடல்நலம் விசாரிக்க வந்த வை.கோ. திமுக குண்டர்களால் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார். இந்த அராஜகச் செயலுக்கு ஸ்டாலின் கன்டனம் தெரிவித்திருக்கிறார். ஆனால், இது ஒரு ஏமாற்று வேலையாகவே தெரிகிறது. ஏனெனில், முன்கூட்டி அறிவித்துவிட்டே வை.கோ. கருணாநிதியைப் பார்க்க வந்திருக்கிறார். எனவே ஸ்டாலினுக்கு தெரியாமல் இந்த தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பது நிச்சயமான உண்மை.
வன்முறை, ரௌடியிசம், அராஜகம் போன்றவைகள் திமுக அரசியலின் அடிப்படை அம்சங்கள் என்பதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
எனவேதான் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் திமுக. வை தீயசக்தி என்று வர்ணித்து திமுக வை அழிப்பதையே தனது அரசியல் இலட்சியமாகக் கொண்டு அதில் வெற்றியும் கண்டார். திரு. ஜெயலலிதா அவர்களும் அவரது அடியொற்றி நடந்து தமிழகத்தை தீய சக்திகளிடமிருந்து பாதுகாத்தார். இப்போதும் அதிமுக இவ்விரு தலைவர்களும் காட்டிய வழியில் நடக்கும் பட்சத்தில்தான் அக்கட்சி தமிழகத்தில் பலமுடன் வேரூன்றி இருக்க முடியும். இல்லையேல் அதிமுக சிதிலமடைவதோடு தமிழகம் ஒரு குடும்ப அராஜகம் வன்முறை தில்லுமுல்லு ஊழல்களில் சிக்கி சீரழியும் என்பது நிச்சயமான உண்மையாகும்.

No comments:
Post a Comment