வாழ்வதற்கு கொஞ்சம் பணம் தேவைதான். ஆனால், இங்கு பலர் பணத்துக்காகவே வாழ்கிறார்கள்....அதிலும் சிலர் பணத்திற்கும், பதவிக்காகவும் எதையும் செய்யும் வெறி பிடித்தவர்களாக வாழ்கிறார்கள்...
பணத்தாசையானது பணவெறியாக மாறவேண்டும் எனில் பணமின்மையால் அவர்கள் அவமானப்பட்டிருக்க வேண்டும்...அந்த அவமானமே அவர்களுக்கு பணத்தின் மீதான வெறித்தனத்தை உருவாக்கும்...
#கடலூர் மாவட்டம் #தென்னாற்காடு மாவட்டமாக இருந்த காலகட்டத்தில், கடலூர் நகரில் இருந்த ஒரு அரசியல் பிரமுகரின் வீடு அது.. அருகிலேயே அவருடைய பூர்வீக கிராமம் இருந்ததால் அங்கு வசித்துக்கொண்டு,நகரில் உள்ள வீட்டினை வாடகை விட தீர்மானித்தார்....
வெளியூரில் இருந்து வந்த கணவன், மனைவி இருவர் மட்டுமே கொண்ட குடும்பம் ஒன்று அந்த வீட்டினை வாடகைக்கு கேட்க, இருவர்தானே என்று மகிழ்ச்சியாக வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார் அந்த அரசியல் பிரமுகர்...
"இருக்க இடம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்ட கதையாக"... வந்தமர்ந்த சிலநாட்களிலே இவர்களின் ஆட்டமும், அதிகாரமும் தலைவிரித்தாடுகிறது... முன்பணமும் தராமல் வாடகையும் தரமுடியாமல் வீட்டின் உரிமையாளரை அலைகழித்தனர்...வீட்டுவாடகை தருமளவிற்கு அவர்களுக்கு வசதியுமில்லை, வழியுமில்லை....
இருவராக வந்தவர்களின் சுற்றமும், நட்பும் ஆக்டோபஸ் உடல்போல பல திசைகளிலும் இருந்து வரத்தொடக்கின... கணவரின் அரசியல் சகவாசங்களின் அதிகார திமிரால் அச்சுறுத்தல்கள் வீட்டில் உரிமையாளரான அரசியல் பிரமுகருக்கு....
வீட்டின் உரிமையாளரும் எதற்கும் சளைத்தவரல்ல.... இவருடைய மைத்துனர் அந்த நேரத்தில் காவல்துறை ஆணையர்.... விடுவாரா??...
தொடர்ச்சியாக சிலமாதங்களாக வாடகை வரவில்லை, கேட்டு நடையாய் நடந்தும்...வீட்டை காலி செய்ய கேட்டும் அவர்கள் அசைந்து கொடுப்பதாய் இல்லை...
அன்று அதிகாலை தனது கிராமத்து வீட்டிலிருந்த அத்தனை மாடுகளை நகரத்து வீட்டில் கொண்டுவந்து கட்டினார்.. காலையில் எழுந்துவந்த கணவனுக்கும், மனைவிக்கும் அதிர்ச்சி...
வீட்டுவாடகை தராததால் மாட்டுக்கொட்டகையில் வாழவேண்டிய நிலை.... ஒருவாரம் கடந்தும் இதேநிலை.... அப்போதும் இவர்களுக்கு வாடகை தர மனமுமில்லை, பணமுமில்லை
பெருத்த அவமானம் எங்கெங்கோ ஓடினார்கள், யார்யாரையோ அழைத்து வந்தார்கள்..... பெருத்த அவமானம்... வேறுவழியின்றி கட்டப்பஞ்சாயத்து செய்து, வீட்டை காலி செய்ய மூன்று மாதங்களுக்கு அவகாசம் வாங்கினர்.... சொன்ன நேரத்தில் காலிசெய்து வேறிடம் சென்றனர்....
அரசியல் தொடர்புடைய கணவன்தான் இன்று அரசினை வழிநடத்தும் கணவான்!!...
வாடகைதர வழியில்லாத பிராட்டிதான் இன்று ஊழலில் திளைக்கும் செல்வச் சீமாட்டி!!!....
இவரின் கையிலா தமிழகம்???...
இவரின் காலடியிலா மாபெரும் கழகம்???...
இவரின் கரங்களிலா இந்திய தேசியக்கொடி???....
அவமானம் நமக்குதான்.... நெஞ்சுபொறுக்குதில்லையே!!!...
இவரின் காலடியிலா மாபெரும் கழகம்???...
இவரின் கரங்களிலா இந்திய தேசியக்கொடி???....
அவமானம் நமக்குதான்.... நெஞ்சுபொறுக்குதில்லையே!!!...
No comments:
Post a Comment