“மிரட்டப்பட்டேன்! எனது உயிருக்கு ஆபத்து!” – ராம்மோகன் ராவ் பகிரங்க குற்றச்சாட்டு
“மிரட்டப்பட்டேன்! எனது உயிருக்கு ஆபத்து!” – ராம்மோகன் ராவ் பகிரங்க குற்றச்சாட்டு
சென்னை அண்ணா நகரில் உள்ள தனது வீட்டில் தமிழகத்தின் முன்னாள் தலைமை
செயலர் ராமமோகனராவ் வருமானவரி சோதனை குறித்து செய்தியாளர் சந்திப்பில் மனம் திறந்து பேசுவதாக தெரிவித்துள் ளார். அப்போது பேசிய அவர் தன் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையை கண்டித்த ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, எஸ்.ஆர்.பி. ஆகியோருக் கு நன்றி தெரிவித்தார். மேலும் வீட்டில் வருமான வரித்துறையினரால் எடுக்கப்பட்ட ஆவணங்களை காட்டினார் ராம மோகன ராவ். என்னை மத்திய போலீஸ் வீட்டு காவலில் வைத்து, என் மீது நடந்த சோதனை அரசியல் சட்டவிரோதம் என குற்றஞ்சாட்டிய ராம் மோகன் ராவ் தொடர்ந்து … நான் ஜெயலலிதா வால் நியமிக்கப்பட்ட தலைமை செயலர் நான் என்றும், சோதனை வாரண்டை என்னிடம் போலீஸ் காட்டினர். ஆனால் அதில் என் பெயர் இல்லை. மேலும் துணை இராணுவத்தின் துணையோடு, மிரட்டப்பட்டு நான் வீட் டுக்காவலில் வைக்கப்பட்டேன். என்றும் ராமமோகன ராவ் தெரிவித்தார்.
என் மகன் விவேக் தனியாக வசிப்பதாகவும் அவர் தெரிவித்தார். என் வீட்டில் ரூ.1.12 லட்சம் மட்டுமே என் வீட்டில் இருந்து எடுத்துள்ளதாகவும், எனது மகள் மற் றும் மனைவி நகைகள் பறிமுதல் செய்துள்ள தாகவும் ராமமோகன ராவ் விளக்கம் அளித்து ள்ளார். மேலும் என் வீட்டில் எந்தவி தமான தவறான ஆவணங்களும் பறிமுதல் செய்யப் படவில்லை என்றும், என் மகன் பெயரிலான வாரண்டை எடுத்து கொண் டு தலைமை செயலர் அறையை சோதித்ததாகவும் ராம மோகன ராவ் குற்றம்சாட்டினார். மேலும் ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் அவர்கள் தலைமை செயலத்தில் உள்ள நுழைய தைரியம் இருந்திருக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் தனது அச்சத்தை வெளிப்படுத் தினார்.
முதலமைச்சர், உள்துறை செயலாளரிடம் எதுவும் சொல் லாமல் தலைமை செயலகத்தில் சோதனை நடை பெற் றதாகவும் ராவ் விளக்கம் அளித் தார். அரசின் ரகசிய கோப்புகள் மட்டுமே எனது அறையில் உள்ளதாகவும், தலைமை செயலர் அறையில் நுழைய மத்திய அரசுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.
No comments:
Post a Comment