Sunday, December 11, 2016

அடுத்த துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி?

சோ சாரின் மறைவிற்கு பிறகு துக்ளக்கின் ஆசிரியர் பொறுப்பை ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள் ஏற்க இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.இது
நடப்பதற்கு துக்ளக் வாசகன் என்கிற அளவில் என்னுடைய முதல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சோ சாரின் மறைவிற்கு பிறகு அந்த இடத்தை யாராலும்
நிரப்ப முடியாது என்பது உண்மை.இருந்தாலும் அந்த
இடத்திற்கு மற்றவர்களை விட ஆடிட்டர் குருமூர்த்தி சார் தகுதியானவர் தான்.சோ சார் அரசியல் சினிமா மதம் என்று கலந்து கட்டி எழுதி கவர்ந்தவர்.ஆனாலும் பொருளாதாரம் என்று வரும் பொழுது எனக்கு அது சம்பந்தமில்லாத வேலை என்று ஒதுங்கி நின்று குரு மூர்த்திக்கு வழிவிட்டுவிடுவார்.
இந்த காலத்தில் நாம் ஒரு புதிய பொருளாதார பாதையில்
பயணத்திக் கொண்டு இருக்கிறோம்.அதனால் நிறைய
பொருளாதாரம் சம்பந்தபட்ட விஷயங்களில் துக்ளக்கில்
கட்டுரைகள் வந்தால் மிக நன்றாக இருக்கும் .வாசகர்க ளும் அதிகரிப்பார்கள்.
என்ன இருந்தாலும் சோ சாரையே ஆர்எஸ்எஸ் பின் புலத்தில் இயங்கும் ஒரு பத்திரிக்கையாளர் என்று
சொல்வார்கள்.ஆனால் அது உணமையன்று என்று நடுநிலையாளர்களுக்கு தெரியும்.எனக்கு தெரிந்து மனித நேய மக்கள் கட்சி என்கிற முஸ்லிம் அடிப்படை வாத கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா,தலித் மக்க ளின் பிரதிநிதிகளான திருமாவளவன்,டாக்டர்.கிருஷ்ண
சாமி, எந்த கட்சியில் இருந்தாலும் கிறிஸ்துவ மத ஊழி ய ராகவே செயல்படும் பீட்டர்அல்போன்ஸ் போன்ற மாற்று சிந்தனை கொண்டவர்க ளின் எண்ணங்களை எல்லாம் முழுமையாக வெளிப்படுத்த பட்டது துக்ளக் கில் மட்டுமே..
கம்யூனிச இயக்க தலைவர்களின் பேட்டிகள் முழுமை யாக அவர்கள் இயக்கம் சாராத ஒரு பத்திரிக்கையில் நான் படித்தது துக்ளக்கில் மட்டுமே..உடனே நீ துக்ளக் கை தவிர வேறு எதையும் படித்து இருக்க மாட்டாய் என்று நீங்கள் சொல்லலாம்.
ஒரு முறை ஜவாஹிருல்லா அவர்களை துக்ளக் ஆண்டு
விழாவில் சிறப்பு விருந்தினராக சோ அவர்கள் அழைத்த தற்கு முக நூலில் பொங்கி தீர்த்தவர்கள் அதிகம் .இருந் தாலும் சோ அவர்கள் ஜவாஹிருல்லாவை அழைத்து வந்து பெருமை படுத்தி தன்னுடைய நடு நிலைமையை
நிலைக்காட்டி கொண்டார்.அதனால் தான் அவரின் மறை விற்கு மும்மதங்களின் சங்கமிப்புடன் மக்கள் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அந்த நடுநிலைமை குருமூர்த்தி சாரின் தலைமையில் கிடைக்குமா என்று அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மாற்று மத வாசகர்கள் நினைப்ப தற்கு வாய்ப்புண்டு. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குரு மூர்த்தி சாரின் தலைமையில் துக்ளக் இயங்க வேண்டும் என்பதே என்னை போன்ற துக்ளக் வாசகர்களின் வேண்டுகோள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...