அம்மா என்னும் டாக்ட்டர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் என்னுடைய அபிமான அரசியல் தலைவரல்ல..... ஆனால் என் மனங்கவர்ந்த பெண்; அனைத்து பெண்களும் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவர் மனத்தைரியம்.
நான் அவரை என் பள்ளிக்கூட நாட்களில் அதிகம் பார்த்திருக்கிறேன்...... முதலமைச்சராக பதவியேற்றாலும் ஒரு பெண்ணாக அவர் நளினம், பெண்மை இதையெல்லாம் ரசித்திருக்கிறேன்..... நேரு விளையாட்டு அரங்கம் திறப்பு விழாவிற்கு நாங்கள் எங்கள் பள்ளிக்கூடத்திலிருந்து "மார்ச் பாஸ்ட்டில்" கலந்து கொண்டோம்..... அப்போது அவ்வப்போது அவர் எங்களை பார்வையிட வருவார்....... அவர் தன்னுடைய மருந்திட்ட கைக்குட்டையால் அவர் முகத்தை துடைப்பதிலேயே ஒரு கதாநாயகியின் நளினம் மிளிரும்......
தேசிய குழந்தைகளுக்கான திரைப்பட விழாவில் எங்கள் பள்ளிக்கூடம் சார்பாக கலந்து கொண்டோம்....... அப்போது பள்ளி மாணவர்கள் குழுமியிருந்த அந்த சபையில் அவர் பேச்சு அவர்களுக்கு தகுந்தாற்போல் கலகலப்பாக இருந்தது.......
என்னை பொருத்தவரை வயதானவர்களின் இறப்பு ஒரு நிகழ்வே..... எனினும் இவர் மரணத்தின் செய்தி அறிந்ததும் அந்த அதிர்ச்சி என் கண்களை பனிக்க செய்ததை மறுக்க மாட்டேன்.....
அவர் பாடிய பாடல் "அம்மா என்றால் அன்பு" 😍😍😍😍
RIP to the Queen 😢😢😢😢
No comments:
Post a Comment