இரட்டை இலை துவையல் செய்து சோற்றில் பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . .
‘இரட்டை இலை’ துவையல் செய்து சோற்றில் பிசைந்து சாப்பிட்டுவந்தால் . . .
சித்தர்கள் அருளிய மூலிகைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் நிறைந்து காணப்படும் மூலிகைகளில் இந்த
இரட்டை இலையுடன் காணப்படும் இருவாட்சி செடி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த இரட்டை இலைகளுடன் காணப்படும் ஒருவகை கத்துச் செடியை இருவாட்சி என்றே அழைக்கிறார்கள். ஆனால் இதன் நிஜப் பெயர் திருவாட்சி என்பதே!
இந்த இரட்டை இலைகளை நன்றாக வதக்கி, பின் இதனுடன் சிறிது உப்பு, கொஞ்சம் புளி, சிறிது, காயம் தேவையானளவு உளுத்தம் பருப்பு ஆகியவற்றை எடுத்து ஒரு வாணலியில் போட்டு அடுப்பை பற்றவைத்து, நன்றாக வறுத்து எடுக்கவேண்டும் . அதன்பிறகு வறுத்ததை அம்மியிலோ அல்லது மிக்ஸியி லோ போட்டு, நன்றாக துவையலாகும் வரை அரைக்க வேண்டும். பிறகு, அரைத்த இந்த இரட்டை இலை துவையலை பதமான சோற்றில் சேர்த்து நன்றாக பிசைந்து சாப்பிட்டுவந்தால் செரிமானம் ஏற்படும். செரிமானம் ஏற்பட் டால் மலச்சிக்கலும் தானாக குணமடையும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்
மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.
No comments:
Post a Comment