Monday, December 26, 2016

இதுதான் எதைத்தின்னா பித்தம் தெளியும்ன்ற லெவல்



''செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகள் தலா 10 எண்ணிக்கைக்கு மேல் வைத்திருந்தால் ரூ.50 ஆயிரம் அல்லது வைத்திருக்கும் பணத்தின் மதிப்புக்கு 5 மடங்கு இதில் எது பெரிய தொகையோ அந்த அளவு அபராதம் விதிக்கப்படும்''
இப்படியொரு தகவலை Highly placed sources said என்று நாட்டின் முன்னணி பத்திரிகைகள் நேற்று மதியம் முதலே செய்தி வெளியிட்டு வருகின்றன.
பணத்தை வங்கியில் மாற்ற டிசம்பர் 30..ரிசர்வ் அலுவ லங்களில் மாற்ற மார்ச் 31..இதுவே மோடி முதன் முதலில் விதித்த கெடு...ஆனால் இப்போது,
ஒரு நாட்டின் ஒரிஜினல் கரன்சியை, அதுவும் அரசு விதித்த கெடுவுக்குள் வைத்திருந்தாலே குற்றம்,அபராதம் என சொல்வது யோக்கியமான ஒரு அரசு செய்கிற காரியமா?
தகவல்கள் அதிகாரபூர்வமற்றவை என்றாலும் மாற்றி மாற்றி அறிவித்து மக்களை சாகடிப்பதில் பிரதமர் மோடி யும் ரிசர்வ் வங்கியும் போட்டிபோட்டுக்கொண்டு செயல்படும் அண்மைக்கால வரலாற்றை பார்க்கும் போது சந்தேகம் வரத்தான் செய்கிறது..
ஒருபக்கம் டெபாசிட் செய்யவும் ஏகப்பட்ட முட்டுக்கட்டை கெடு..இன்னொரு பக்கம் டெபாசிட் பண்ணமுடியாமல் வைத்திருந்தாலும் குற்றம்..
ஆக எப்படியாவது மாற்றமுடியாமல் செய்யவைத்து இவ்வளவு நோட்டுக்கள் வரவில்லை.அவையெல்லாம் கருப்புப்பணம் என்று அறிவிக்க துடிக்கிறார்களோ?
இதெல்லாம் பச்சை துரோகம் இல்லையா என்று கேட்க..அறிவிப்புகள் வருகிறதா என பார்ப்போம்
அறிவிக்காமலேயே ஏன் இப்படி பொங்குகிறீர்கள் என மோடி ஆதரவாளர்கள் கேட்கலாம்..ஆனால் சொன்னதற்கு மாறாக மாற்றி மாற்றி பேசுகிற அயோக்கியத்தனத்திற்கு முன் இந்த பொங்கலெல்லாம், ஜஸ்ட் வெறுஞ்சோறுதான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...