கடந்த சில நாட்களாக அடுத்த அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாதான் என்று அதிமுகவினர் பேசி வந்தனர். ஆனால் திடீரென கடந்த இரண்டு நாட்களாக முதலமைச்சர் பொறுப்பையும் சின்னம்மா ஏற்க வேண்டும் என்று கூறி அமைச்சர்கள் உள்பட அதிமுக பெரும்புள்ளிகள் பேசி வருகின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ஓபிஎஸ் திடீரென அப்பல்லோவிற்கு ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சையின் விபரங்களை தருமாறு உத்தரவிட்டுள்ளாராம்.

இதனால் சசிகலா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் ஓபிஎஸ்-இன் இந்த உத்தரவுக்கு மத்திய அரசு பின்னணியில் உள்ளது என்றும் சசிகலா எந்த பதவியையும் ஏற்காமல் தடுப்பதற்காகவே இந்த மிரட்டல் என்றும் கூறப்படுகிறது.
முதல்வரின் சிகிச்சை விபரங்கள் வெளிவந்தால் சசிகலாவுக்கு மட்டுமின்றி அப்பல்லோ நிர்வாகத்திற்கும் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன....
No comments:
Post a Comment