Wednesday, December 21, 2016

தமிழக தலைமை செயலாளரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்தும் ரெய்டின் முழு பின்னணி லைவ் டே. இதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது. பா.ஜ.க.வின் கைங்கிரியம் தான் ஆட்டுவிக்கிறது என்று பொத்தாம் பொதுவில் சொன்னாலும் கூட ராம்மோகன்ராவ் செய்திருக்கும் பல்லாயிரங்கோடி ஊழலுக்கான ஆதாரங்கள் உள்ளன. அதில் சேகர் ரெட்டியினுடனான கூட்டு மட்டுமே காரணமில்லை. அதையும் கடந்து பல உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் சற்று விரிவான ஆதாரங்களோடு பார்ப்போம். சட்டமன்ற தேர்தல் 2016 க்கான நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது முதல்வரின் செயலாளராக இருந்தார் ராம்மோகன்ராவ். அப்போது அவருடைய பினாமி நிறுவனமான Pathmavathi Hospitality & Facilities Managment Service 30.04.2016 அன்று ரூ.129.86 கோடிக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது. தமிழகத்தின் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் House Keeping and Security Services பணிக்காக 18..9.2013 ல் இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 67.16 கோடிக்கான ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. இதன் பின்னணியில் ராம்மோகன்ராவ் இருந்ததால் மூன்று ஆண்டுகளுக்கு அந்த ஒப்பந்தம் மீண்டும் புதிப்பிக்கப்பட்டது. அதன்படி போட்ட ஒப்பந்தம் 17.9.2016 அன்றுதான் முடிவடைகிறது. அப்படியென்றால் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் டெண்டர் விட வேண்டும். ஆனால் 2016 தேர்தலில் அ.தி.மு.க.தோற்றுவிடும். தி.மு.க.ஆட்சிக்கு வரும்.
அப்படி தி.மு.க. வந்துவிட்டால் Pathmavathi Hospitality & Facilities Managment Service க்கு ஒப்பந்தம் கிடைக்காது என்று முடிவெடுத்த ராம்மோகன்ராவ் முன்கூட்டியே டெண்டர் கோரவைத்தார். தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குநரகம் 12.1.2016ல் டெண்டர் கோரியது. 129.86.கோடிக்கான டெண்டருக்கு 15 நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கவைத்தார். இந்த டெண்டருக்காக எந்த பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கான OUT SERVICING டெண்டரில் கலந்து கொண்ட நிறுவனங்கள், அவர்கள்கொடுத்த பிரைஸ் லிஸ்ட், இறுதி செய்யப்பட்ட நிறுவனம் இதைப்பற்றியெல்லாம் கோப்புகளில் எதுவும் குறிப்பிடாமல் 30.4.2016 அதாவது சட்டமன்ற தேர்தல்விதிமுறைகள் அமலில் இருக்கும் போது தமிழக மருத்துவக்கல்லூரி இயக்குநர் டாக்டர் விமலா Pathmavathi Hospitality & Facilities Managment Service நிறுவனத்துடன் ரூ.129.86.கோடிக்கு ஒப்பந்தம் போடுகிறார். இந்த ஒப்பந்தம் 1.5.2016 முதல் நடைமுறைக்கு வந்தது. இதற்கான ஒப்பந்தத்தில் ராம்மோகன்ராவின் உறவினர் சீனிவாசராவ் சாட்சி கையெழுத்து போட்டுள்ளார். இந்த டெண்டரில் மட்டும் 100 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார் ராம்மோகன்ராவ். இந்த புள்ளிவிவரங்களை ஆசிர்வாதம் ஆசாரி என்பவர் துள்ளியமாக போட்டுக்கொடுத்துள்ளார். இவர் தமிழக அரசின் நடவடிக்கைகளை பா.ஜ.க.தலைமைக்கு அப்டேட் செய்ய நியமிக்கப்பட்டவராவார். அடுத்து, வீட்டுவசதி வாரியத்தின் சுமார் 100 கோடி மதிப்புள்ள 2.28.ஏக்கர் நிலத்தை ஸ்வாகா செய்து, சமீபத்தில் கைதாகி ஜாமினில் வெளிவந்திருக்கும் ஒரு கல்வியாளரின் பின்னணியில் ராம் மோகன் ராவ் உள்ளார். வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்த ராமாபுரம் கிராமம், தற்போது சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு ரூ.100மதிப்புள்ள வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான சர்வே எண் 134/10/ல் உள்ள 2.28.ஏக்கர் நிலத்தில் வள்ளியம்மை சொசைட்டி பெயரில் ஆக்கிரமித்து பல்துறை கல்லூரிகள் கட்டப்பட்டிருக்கின்றன. இந்த நிலத்தை கையகப்படுத்த நீதிமன்ற உத்தரவு இருந்தும் ராம்மோகன் ராவ் பின்னணியில் உள்ளதால் அவற்றை கிடப்பில் போட்டாராம்.இதற்காக பெரும் பணம் கைமாறியிருக்கிறது. இவைபோல் பல்வேறு முறைகேடுகள் செய்த ராம்மோகன்ராவ் குறித்த கோப்பு இப்போ மோடி கையில்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...