
சோ மறைந்தார்! – சரித்திரத்தின் சரீரமும் சாரீரமும்தான் மறைந்ததே தவிர சரித்திரம் மறையவில்லை.
சோ மறைந்தார்! – சரித்திரத்தின் சரீரமும் சாரீரமும்தான் மறைந்ததே தவிர சரித்திரம் மறையவில்லை.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மூத்த பத்திரிக்கையாளர் உள்நோயாளியாக

துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரும் மூத்த பத்திரிக்கை யாளருமானவர் சோ.ராமசாமி. (82), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலை
யில் இன்று (07-12-16) அதிகாலை சுமார் 4 மணிஅளவில் அவரது உயிர் பிரிந்த து. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவி ன் நெருங்கிய நண்பராகவும், ஆலோச கராகவும் இருந்தவர் சோ. ஜெயலலிதா இறந்த இரண்டாவது நாளில் சோ காலமாகியுள்ளார்.



சோ அவர்கள், 1999-2005 ல் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். முகமது பின் துக்ளக் முதலில் நாடகமாக வடிவமைத்து மேடையில் போட்டார். அதன்பிறகு அந்த நாடகத்தை, 1971 ஆம் ஆண்டு தமிழ்த்திரைப்பட மாக எடுக்க எண்ணி இத்திரைப்படத்தை அவரே இய க்கியதுடன், அவ
ரே முகம்மது பின் துக்ளக் ஆகவும் நடித்தார். இத்திரைப்படமும் சரி இதில் இவரது நடிப் பும் மக்கள் மத்தியில் இவருக்கு மிகுந்த வரவேற்பை பெற்றுத் தந்தது.

1970ல்துக்ளக் வார இதழைதொடங்கி, அதில்
வாசகர் கேட்கும் கேள்விகளுக்கு நகைச்சுவை யுடனுன் நையாண்டியுடனும் அவரே பதிலையும் அளித்து வந்தார்

வாழ்க்கைக் குறிப்பு
சோ ராமசாமியின் தந்தையார் ரா. ஸ்ரீ நி வாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை மயிலா ப்பூர் P.S. உயர் நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல் லூரியிலும் பயின்று இளநிலை அறிவியல் B.Sc., பட்டப் படிப்பை விவே கானந்தா
கல்லூரியிலும் பயின்றார். பின் 1953 – 1955-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரி யில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (B.L.,) பட்டம் பெற்றார். 1957 முதல் 1962 வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினா ர். 1962 முதல் டி.டி.கே (T.T.K) கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். இவருக்கு 1966 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும்
உள்ளனர். ’சோ’ எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன் மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத் திரத்தின் பெயராகும்.

ஒரு சரித்திரத்தின் சரீரமும் சாரீரமும்தான் மறைந்ததே தவிர சரித்திரம் மறைய வில்லை.
No comments:
Post a Comment