Sunday, December 25, 2016

#அத்தனை_உண்மைக்கும்_அவன்_சாட்சி மரணம் சில கேள்விகள் ....???



நெஞ்சுக்கு தேவை மனசாட்சி
அது நீதி தேவனின் அரசாட்சி

1.20 முதல் 22/9/16ல் ஜெ.க்கு உண்மையில் என்ன நடந்தது ...???
2. மக்கள் அவரை கடைசியாக பார்தது 20 - 9 - 16ல் . அதன் பிறகு 77 நாள் கழித்து இறந்த நிலையில் .. இடை பட்ட நாட்களில் அவர் முகத்தை கூட ஏன் யாருக்கும் காட்டவில்லை ...??
3. சசிகலா , மருத்துவர்களை தவிர்த்து அவரை பார்த்தவர்கள் யாராவது உள்ளனரா ???
4. கவர்னர் ஏன் அவர் சிகிட்சை பெறுவதை நேரடியாக பார்க்கவில்லை ???
5. கவர்னரை தடுத்தது யார் ?? அவரை தடுக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது ???
6. தமிழச்சி என்பவர் ஜெ.இறந்து விட்டார் என கூறிய போது அவரை வதந்தி வழக்கில் கைது செய்ய துடித்தவர்கள் .., அவர் கூறியது பொய் என மக்களுக்கு ஏன் நிருபிக்கவில்லை ???
7. ஒரு முதலமைச்சருக்கு என்ன நடந்தது என தெரியாமல் தவிக்கும் போது , அவரை பற்றிய உண்மை செய்திகளை மக்களுக்கு மத்திய அரசு அறிவிக்காதது ஏன் ???
8. நோய் தொற்று ஏற்படாவண்ணம் நோயாளியை பார்க்க சிறப்பு உடை உண்டு ., அதை அணிந்து ஜெ.வை பார்ப்பதில் கவர்னருக்கும் , தலைமை செயலாளருக்கும் , பன்னீர் செல்வத்திற்கும் விருப்பம் இல்லையா ...???
9. வெளியிலிருந்து வேறு யாராவது பார்த்தால் நோய் தொற்று ஏற்படும் எனில் சசிகலா எப்படி அனுமதிக்கபட்டார் ...???
10. அவருக்கு சிகிட்சை அளித்த டாக்டர்கள் நோய் தொற்று ஏற்படாவண்ணம் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் அங்கே தங்கியிருந்தா சிகிட்சை செய்தார்கள் ??
11, லண்டன் டாக்டர், சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்ட் வெளியிலிருந்து தானே வந்தார்கள் ., அவர்களால் நோய் தொற்று ஏற்படாதா....???
12. வெறும் காய்ச்சல் இரண்டு நாளில் வீடு திரும்புவார் என கூறபட்ட ஜெ. ஏன் அதை தன் வாயால் கூற வில்லை ....???
13. ஜெ.வின் ரத்த உறவுகளை கூட பார்க்க அனுமதிக்காதது ஏன் ...??
14. முதல்வர் ஜெ.வை யார் யார் பார்கலாம் , அல்லது பார்க்க கூடாது என தமிழக அரசு ஏதாவது உத்தரவு பிறப்பித்துள்ளதா ...???
15. சசிகலா மட்டுமே முதல்வரின் பரிபூரண உத்தரவாதி , எனவே முதல்வர் விஷயத்தில் அவர் மட்டுமே முடிவு எடுக்கலாம் என சிறப்பு அரசு ஆணை உள்ளதா ...???
16. அப்பல்லோ இது போன்ற அறிவுரை அல்லது அறிவிப்பு ஏதாவது வெளியிட்டுள்ளதா ..??
17. தேவைப்பட்டால் வெளிநாடு கொண்டு செல்வோம் என கூறியவர்கள் ஏன் வெளிநாடு கொண்டு செல்லவில்லை ...???
18. வெளிநாடு கொண்டு சென்றாலும் பிரயோஜனமில்லை என தெரிந்துதான் கொண்டு செல்லவில்லையா ...??
19. கொண்டு வரும் போது நன்றாக இருந்தார் ., இடையில் மோசமானார் ., மீண்டும் தேறினார், பேசினார், தனக்கான உணவை தானே உண்கிறார் , கையெழுத்திட பழகுகிறார், நடக்க முயற்சிக்கிறார் என கதை வசனம் எழுதிய அப்பல்லோ அதற்கான போட்டோ ,வீடியோக்களை வெளியிடுமா ???
20. இந்த டிஜிட்டல் உலகில் வீடியோ போட்டோ எடுக்கவில்லை என அப்பல்லோ கூறுமாயின் அது பச்சை பொய் ...???
21. ஏனெனில் வீடியோ போட்டோ மூலமே இவர்கள் லண்டன் டாக்டர், எயிம்ஸ் டாக்டர்களிடம் ஆலோசனை செய்திருப்பார்கள்..??
22. எயிம்ஸ் டாக்டர்கள் அறிக்கைபடி மத்திய அரசும் அவர் நலமுடன் உள்ளதாக கூறியதே அதற்கான ஆதாரத்தை ஏன் வெளியிடவில்லை ??
23. உடல் நலக் குறைவாவால் ஜெ. முகம் மெலிந்து தேகம் இளைத்து பரிதாபமாக காணப்பட்டார், அந்த கோலத்தில் அவர் தொண்டர்கள் தன்னை காண விரும்பவில்லை என கூற முடியாது , காரணம் மரணமடைந்த நிலையிலும் உயிருடன் உள்ளது போலவே கம்பீரமாக காணப்பட்டது அவரது முகம் மற்றும் உடல் , எனவே அவர் சிகிட்சை பெறும் காட்சி, அவர் உணவருந்தும் காட்சி, திட்டங்களுக்கு ஆலோசனை வழங்கும் காட்சி என எதையும் வெளியிடாமல் மத்திய, மாநில, அப்பல்லோவை தடுப்பது எது .. ..???
24. ஜெ. உத்தரவிட்டு பல திட்டங்களை நிறைவேற்றியதாக தமிழக அரசு செய்தி குறிப்பு வெளியானதே ., யாரிடம் அவர் சொன்னார், அதற்கு சாட்சி , தலைமை செயலாளரா அல்லது அமைச்சர்களா ...???
25. நலமுடன் உள்ளார் , விரும்பும்போது வீட்டிற்கு போகலாம் என கூறிய ரெட்டி , அதற்கான ஆதாரம் வெளியிடுவதில் என்ன தயக்கம் ..??
26. துவக்கத்திலிருந்தே முதல்வர் ஜெ. இறந்து விட்டார் என பல வகையில் தகவல்கள் பரவிய நிலையில் அவை பொய் என நிருபிக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்து ஏன் ...???
27. நம் மீது பழி வந்து விட கூடாது என்பதற்காக எப்போதுமே ரகசிய ஆதாரங்களை வைத்திருப்போம் ., அது போல் அப்பல்லோவும் ஆதாரம் ஏதாவது வைத்துள்ளதா ???
28. ஜெ. உடல் நிலையில் எழுந்த சந்தேகத்தால் பலரும் நீதிமன்றம் சென்றனர் ... குறைந்த பட்சம் யாராவது ஒரு நீதிபதியாவது நேரடியாக சென்று கண்ணால் பார்த்து விசாரித்திருக்கலாமே ...??
Image may contain: 1 person, smiling, closeup
29. ஒரு வேளை அவர் மிகப் பெரிய அரசியல் குழ்ச்சியில், பலர் உடந்தையுடன் அதிகாரமிக்க சதிகாரகும்பலிடம் சிக்கி சிறை வைக்கபட்டிருந்தால் ....????
30. யாராவது தன்னை பார்க்க வருவார்கள் , அவர்களிடம் கூறலாம் என அவர் நினைத்திருந்தால் , 75 நாட்கள் அவரை யாரும் பார்க்கவராததால் அந்த வேதனையில் அவர் இறந்திருந்தால் ....???
33. தமிழக நலன்களுக்கு விரோதமானது என அவர் கடுமையாக எதிர்த்த திட்டங்கள் , அவர் அப்பல்லோவில் இருக்கும் போது தமிழக அரசின் ஒப்புதலோடு மத்திய அரசால் நிறைவேற்றபட்டுள்ளதே அது எப்படி ????
34. உண்மையில் அவ்வாறு நடந்திருந்தால் அது, இந்திய நீதிதுறை ஜெயலலிதாவுக்கு வழங்கிய கொடும் தண்டனையல்லவா ???
35. முதல்வர் ஜெ.வை 75 நாட்கள் யாரையும் பார்க்க விடாமல் செய்து கடைசியில் அவரை பிணமாக வெளிகாட்டிய சம்பவத்தில் இந்திய நீதிதுறைக்கு செய்வதற்கு ஒன்றுமே இல்லையா ??
36 . அவரது மரண அறிவிப்பில் ஏன் இந்த குளறுபடி , இறப்பதற்கு முன்னால் இறந்ததாக அறிவித்த மீடியாக்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன ??.
37. சாதாரண காய்சல் என சென்றவரை 75 நாள் கழித்து பிணமாக அனுப்பிய மருத்துவமனையை ஏன் பூட்டிசீல் வைக்க கூடாது ???
38. அவர் விரோதிகளாகவும், துரோகிகளாகவும் பகிரங்கமாக அறிவித்த ஒரு கும்பல் அப்பல்லோ முதல் சமாதிவரை அவரை சுற்றி நிற்க மத்திய, மாநில அரசுகள் எப்படி அனுமதித்தன ...???
39. ஆறுதல் சொல்ல வந்த பிரதமர் நேரே சென்று சசிகலாவிடம் ஆறுதல் சொன்னது யாருடைய தந்திரம் ... யாரை ஒதுக்க , எதை மறைக்க ???
40.இரத்த உறவுகள் இருக்கும் போது இறுதி சடங்கு, ராணுவ மரியாதை பெறுதல் ஆகியவை எப்படி சசிகலாவுக்கு வழங்க பட்டன ..??
41. அவரை நேசித்த மக்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த கூட நேரம் தராமல் அடக்கம் செய்தது ஏன் ???
42. சாதாரண மனிதன் இறந்தாலே சொந்தங்கள் வந்து சேரும்வரை 2 நாட்கள் வைத்து 3ம் நாளில் அடக்கம் செய்யும்போது லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக 3 நாள் ஒதுக்காமல் அவசர அவசரமா அடக்கம் செய்த காரணம் என்ன ., இந்த முடிவை எடுத்தது யார் ???
43. ஜெ. கன்னத்தில் காணப்பட்ட 4 புள்ளி என்னது ???
44. அப்பல்லோ மற்றும் போயஸ் கார்டனில் ஜெ. உடலுக்கு இறுதி சடங்கு செய்யும்போது மருமகள் தீபாவுக்கு திட்டமிட்டு எதற்காக அனுமதி மறுக்கப்பட்டது ., ஒருவேளை உடலில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் கண்டுபிடித்து வெளியில் சொல்லி விடுவார் என்பதாலா ???
45. இறுதியாக ... ஜெ. எப்போது மரணம் அடைந்தார், எதனால் மரணமடைந்தார் , 22 - 9 முதல் 5 - 12 வரை நடந்தது என்ன, ஏன் யாரையும் பார்க்க அனுமதிகவில்லை , அவரது மரணத்தில் மட்டும் இத்தனை மர்மங்கள் ... ??
விடை தருவது யார் ????

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...