‘சாக்லேட்’ சாப்பிடும் பெண்களுக்கு உண்மையில் இது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்
சாக்லேட் சாப்பிடும் பெண்களுக்கு உண்மையில் இது அதிர்ச்சியாகத் தான் இருக்கும்
பருக்களுக்கும் நாம் சாப்பிடும் உணவுப் பொருளுக்கும் தொடர்பு உண்டு. அதிலும்
சாக்லேட் போன்ற கொழுப்பு நிறைந்த பொருட்களுக்கு மிக நெருங்கிய தொடர்புண்டு. முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவைக் குறைத்துக்கொண்டால், பருக்கள் விரைவில் குணமாகும். இதுஎப்படி நடக்கிறது? உடலில் கொழுப்பு கூடும்போது, கொழுப்பு அமிலங்களும் கூடும் . இவை எண்ணெய் சுரப்பி செல்களை உறுத்திக்கொண்டே இருக்கும். இத ன் விளைவால், எண்ணெய்ச் சுரப்பிகளின் துவாரம் மூடிக் கொள் ள, பருக்கள் அதிகரிக்கும். இந்தவாய்ப்பைத் தடுப்பதற்காகவே கொழுப்பு உணவை க் குறைத்துக்கொள்ள வேண்டும்.
ஒயிட் சாக்லேட், டார்க் சாக்லேட், மில் சாக்லேட் எனச் சாக்லேட் கள் மூன்று வகைப்படும். எல்லாச் சாக்லேட்களும் கொழுப்புச் சுரங்கம்தான். 100 கி. சாக்லேட்டில் 30 – 40 கிராம் கொழுப்பு உள் ளது. இக்கொழுப்பு செறிவுற்ற கொழுப்பு (Saturated fat) வகை யைசேர்ந்தது, கொழுப்பு அமிலம் மிகுந்தது.
சாக்லேட்டில் கொலஸ்ட்ரால் அளவும் அதிக ம். 100 கி. சாக்லேட்டில் 23கி. கொலஸ்ட்ரா ல் உள்ளது. ஆக, எண்ணெய்ச் சுரப்பிகளுக்கு நல்ல‘தீனி’ கிடைத்துவிடும். இதனால்அவை சீக்கிரத்தில் மூடிக்கொள்ளும். இந்நிலையி ல் ஏற்கெனவே பருக்கள் இருந்தால் அவை அதிகரிக்கும்; புதிதாகவும் பருக்கள் தோன்று ம். அதனால் பரு இருப்பவர்கள், சாக் லேட்டைத் தவிர்ப்பதே நல்லது.
No comments:
Post a Comment