இவர்களுள் ஒரு சிலர் ஞானியாகவும் புலமை மிக்கவர்களாகவும் புகழ் பெறுவதுண்டு. கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் முருகப்பெருமான், உரிய கிரகம் சூரியன். இந்த கிரகத்திற்குரிய அதிதேவதை சிவன். சிவனை வழிபட்டால் பல்வேறு செல்வ வளங்களை பெற்று
மகிழ்ச்சி பெறலாம் என்கிறார்
ஈரோடு மாவட்டம் அவல் பூந்துறையை சேர்ந்த விஜய் சுவாமிஜி.அவர் கூறியதாவது:
சூரிய வழிபாடு சூரிய வழிபாடு மிகவும் தொன்மையான வழிபாடு. கிருத்திகை நட்சத்திரகாரர்கள் சூரிய வழிபாடு செய்தால் சகல செல்வங்களும் பெறலாம். சிவாலயங்களில் சூரிய பகவான் தனித்தும் நவக்கிரகங்களுக்கு நாயகனாகவும் வீற்றிருக்கின்றார்.
ஏனைய ஆலயங்களில் நவநாயகர்களுக்கு நடுநாயகனாக
வீற்றிருப்பதை நாம் காண முடியும். சூரியன் எமக்கு வெளிச்சம், வெப்பம், சூடு, உஷ்ணம் ஆகியவற்றைத் தருகின்றார்.
அதேபோன்று சூரிய வெப்பத்தால் கடல், ஆறு, குளம் முதலானவற்றின் நீர் ஆவியாக மேலெழுந்து பின்னர் மழையாகப் பொழிகின்றது. இதனால் விவசாயம் மேம்படுகின்றது. நீர் விசையால் மின்சாரம் கிடைக் கின்றது. எனவே நமது வாழ்வுக்கு நன்மைகள் கிடைக்கின்றன. காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் காத்ர சுந்தரேஸ்வரர் கோவில்.
தல வரலாறு:
பத்மாசுரன், சிங்கமுகன் உள்ளிட்ட அசுரர்களால் பாதிக்கப்பட்ட
முனிவர்களும், தேவர்களும் தங்களை காப்பாற்றும்படி பார்வதி தேவியிடம் முறையிட்டனர். இவர்களது குறை போக்க பார்வதி சிவனை வேண்டினாள். சிவபெருமான் காத்ஜோதி ( நெருப்பு வடிவம்) யோகம் பூண்டு தவம் செய்து கொண்டிருந்த காலம் அது.
அம்மனின் வேண்டுதலால் தவம் கலைந்த சிவன், காத்ர சுந்த ரேஸ்வரர்(கார்த்திகா சுந்தரேஸ்வரர்) என்னும் பெயர் கொண்டு
தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து ஆறு ஜோதிகள் புறப்பட்டன. அந்தப் பொறிகள் ஒன்றி ணைந்து காத்திகேயன் ஆயின. முருகன் பிறக்க காரணமாயின. இத்தல இறைவனிடமிருந்து ஆறு தீப்பொறிகளின் காஞ்சனப் பிரகாசம் தோன்றியதால் இவ்வூர் காஞ்சன் நகரம் என்று பெயர் பெற்றிருந்தது. காலப் போக்கில் கஞ்சாநகரம் (பொன் நகரம்) ஆனது. தான் தோன்ற
காரணமாக இருந்த இத்தல இறைவனை கார்த்திகேயன் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். கார்த்திகா சுந்தரேஸ்வரர் என்றால் ஆறுவித ஜோதிகளை உருவாக்கும் சக்தி படைத்தவர் என்று பொருள்.
கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் கிருத்திகை நட்சத்திரத்தன்றோ, பிரதோஷ நாட்களிலோ இந்தக் கோயிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வளம் பெறலாம் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ள கிருத்திகை நட்சத்திரப்பெண்கள் புண்ணிய நதிகள் தீர்த்தத்தால்
இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளிக் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திர நாட்களில் இந்தக்கோவிலில் தரிசனம் செய்தால் சிறந்த மணவாழ்க்கை அமையும்.வெள்ளிக்கிழமை தோறும் இரவு சட்ட நாதருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
மயிலாடுதுறைலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8.கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம்.
தோஷம் நீங்க
இந்நாட்களில் கிருத்திகை நட்சத்திரத்தின் நல்ல மின் காந்த கதிர்வீச்சுகள் பூமியில் படரும் அது மிகவும் நல்லது. அத்தி மரம் கிருத்திகை நட்சத்திரத்திற்கு உரிய மரமாகும். இந்த மரத்தின் உடலில் பால் நிரம்பி இருக்கும். அந்தப்
பால் கார்மேகங்களை தன் பக்கம் இழுக்கும் குணம் கொண்டது.
இதன் குச்சிகளை எரித்தால் அதன் புகை மழை பொழியும் கருமேகங்களை வரவழைக்கும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.
கிருத்திகை நட்சத்திரத்தின் கெட்ட கதிர் வீச்சுகள் மனித உடலில் படும் போது பல வகையான உடல் மாற்றம், மன மாற்றம் நோய்கள் உண்டாகின்றன. இதற்கு கிருத்திகை நட்சத்திர தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தையும். நோய்களையும் நீக்க இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அத்தி மரத்தை 20 நிமிடம் கட்டிப்பிடிக்கலாம் அல்லது அதன் நிழலில் உட்காரலாம்.
சூரியன் நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சியைக் காண்கின்றது. எனவே தான் பன்னெடுங் காலமாக நமது முன்னோர் சூரியனை வழிபட்டு வந்தார்கள்.
சூரியன் யார்ப அவர் சிவசூரியன், சிவ பெருமானின் அஷ்ட மூர்த்தங்களில் ஒருவர். சிவ பெருமானின் முக்கண்களில் ஞானக்கண்ணாக உள்ளவர். இதனால் சூரியனைச் சிவ ரூபமாக கொண்டு வழிபட்டு வருகின்றோம். சிவாலயங்களில் சிவ சூரியனுக்குத் தனிச்சந்நிதி உள்ளது. இச்சூரியனுக்குப் பூஜைகள் செய்த பின்னரே ஏனைய பூஜைகள் செய்யப்படுகின்றன. அதேபோல எல்லா ஆலயங்களிலும் நவக்கிரக சந்நிதானத்தில் நடுநாயகனாக உள்ளவர் சூரியனே ஆவார்.
ஒருவரின் ஜாதகப்படி அவருக்கு ஆயுள், வீரியம், இருதய பலம்,
துணிவு, தலைமைத்துவத் தன்மை என்பவற்றைக் கொடுப்பவர் சூரியனேயாவார். ஒருவரின் தந்தையினுடைய நிலைப்பாங்கை அவரின் ஜாதகத்திலிருந்தே அறிந்து கொள்ள முடியும்.
ஆகவே ஜாதகத்தில் சூரியனின் நிலை முக்கியமானதாகும். இவ்வாறு விக்கிரக வடிவில் சூரியனை வழிபடும் நாம் தினமும் எமது இரு கண்களாலும் பார்க்கும் சூரியனை விரத அனுட்டானங்களுடன் வழிபடுவது வழக்கம்.
கிருத்திகை தோஷம் உடையோர் ஞாயிற்றுக்கிழமைகளில்
விரதம் இருந்து காலையிலே வீட்டில் இருந்தவாறு சிவப்புப் பூவும் நீரும் கைகளில் ஏந்தி சூரிய பகவானே எனது தோஷத்தைப் போக்கியருளும் என வேண்டி பூவையும் நீரையும் சூரியனைப் பார்த்தவாறு பூமரத் தடியில் போட்டு வணங்கவும். 108 தடவைகள் இதனை செய்யலாம். கோவிலில் சூரியனுக்கு அபிஷேகம் செய்யலாம். சர்க்கரைப் பொங்கல் நைவேதிக்கலாம். கோதுமைத் தானங்கொடுக்கலாம்.
சிவப்புப்பட்டு சிவப்புப் பூமாலை அணியலாம். சிவப்புப் பூவால் அர்ச்சித்து வழிபடலாம். தினமும் சூரிய கவசம் படிப்பது மிக்க பலனைத்தரும்.
சிவராத்திரி விரத முறை
கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் சிவராத்திரி விரதம் இருப்பது நல்லது. சிவராத்திரி விரதம் அனுசரிப்பவர்கள் அன்று முழுவதும் சாப்பிடக்கூடாது. உலகத்தின் அமைதிக்காகவும் நன்மைக்காகவும் சிவாலயங்களில் ஹோமத்திற்கு ஏற்பாடு செய்வார்கள்.
மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி
மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வந்த தீப்பொறிகள், சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற அந்த குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சூரபத்மனை அழித்து தேவர்களையும் மக்களையும் காக்க
அவதரித்த ஆறுமுகனை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் வகையில் கிருத்திகை விரத திரு நாளாக கொண்டாடப் படுகிறது.
உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும் நேர்த்திக் கடன் களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா
முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதிஉலா என விமரிசையாக நடக்கிறது.
காவடிப் பிரியனான கந்தனுக்கு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக் காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும்,
நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தியும் ஆனந்த பரவசம் அடைகின்றனர்.
கோவில்களிலும், வீடுகளிலும் பொங்கலிட்டு அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து கந்தபுராணம் பாராயணம் செய்து வணங்குகின்றனர். பழனி முருகனை இருந்த இடத்தில் இருந்தே மானசீகமாக வழிபட்டாலும் பழனி என்ற பெயரை சொன்னாலும் நம் தீவினைகள் நீங்கும் என்பது அருளாளர்கள் வாக்கு. முருகப் பெருமான் இத்தலத்தில் பல்வேறு அற்புதங்களை செய்கிறார்.
ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம்.
மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சினைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த
கிருத்திகை தினத்தில் கந்த வேலை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சினைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
கடன் தொல்லை அடியோடு நீங்கும். நம்பிக்கையுடன் மனமுருக பிரர்த்தித்து சகல நலங்களும் பெறுவோம் என்கிறார் விஜய் சுவாமிஜி.
No comments:
Post a Comment