சொத்துக்குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜாமின் கோரி அவர் சார்பில் கர்நாடகா ஐகோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. ஜெ., தரப்பில், பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரா, ஜெயலலிதாவிற்கு நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டார்.
ஜெயலலிதா ஜாமின் மனு மீதான விசாரணையில், அரசு தரப்பில் பவானிசிங் ஆஜராகி வாதிட்டார். அப்போது ஜெயலலிதா ஜாமினில் வௌிவர எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும், ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கலாம் எனவும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment