ஒரு நீதிமன்றம் இவ்வளவு முட்டாள் தனமாக நடந்துகொள்ளும் என்பதற்கு செயலலிதா வழக்கு மிகச்சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
இங்கு கர்நாடகா & தமிழ்நாடு பகையை ஊட்டுவதற்காக இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது என யாரும் தவறாக அர்த்தம் கொள்ளக்கூடாது. இது போன்ற சம்பவம் தமிழ்நாட்டில், கேரளாவில், பீகாரில் ஏன் இந்திய உச்சநீதிமன்றத்தில் நடந்திருந்தாலும் அதை சுட்டிக்காட்ட உரிமை இருக்கிறது என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.
கர்நாடக நீதிமன்றமும் செயலலிதாவும் நீயா&நானா கபடி விளையாடி உள்ளனர். இப்படி 100 கோடி இந்திய குடிமக்களையும் கேவலப்படுத்தியுள்ளார்கள். இதில் நீதிமன்றத்தின் செயல்பாடு தான் மிகமோசமாக உள்ளது. ஒரு நீதிமன்றம் எப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கு கர்நாடக நீதிமன்றம் உதாரணமாக உள்ளது.
நீதிபதி குன்கா ஒரு கீழ்த்தரமான சர்வாதிகாரி போல செயல்பட்டிருக்கிறார். அவரை காப்பாற்ற கர்நாடக உயர்நீதிமன்றமும் நாடகமாடி வருகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நீதிபதிகள் விருப்பு வெறுப்புகளை கடந்து, உணர்ச்சிவயப் படாதவர்களாய், குறிப்பாக தலைக்கணம் இல்லாதவர்களாய் இருக்க வேண்டும். ஆனால் குன்காவின் தலைக்கணம் நீதிமன்ற காவலர்களையும், வழக்கறிஞர்களையும் எச்சரித்ததில் இருந்து துவங்குகிறது.
செயலலிதா வரும் போது யாரும் எழுந்து நிற்கக்கூடாது என அறிவித்திருக்கிறார். ஒருவருக்கு மரியாதை கொடுப்பது என்பது தனி மனித உரிமை. அதை கேள்வி கேட்ட நீதிபதி குன்காவின் மன நிலையை தலைக்கணம் என்று தானே சொல்ல முடியும்!.
செயலலிதா ஒரு அரசாங்கத்தின் முதல் அமைச்சர் என்பதை மறந்து செயல்பட்டிருக்கிறார். நான் செயலலிதாவுக்கு மரியாதை கொடுக்க சொல்லவில்லை. முதல் அமைச்சர் என்ற மாண்புமிகு பதவிக்கு தான் மரியாதை கொடுக்க சொல்கிறேன்.
நீதிபதி குன்கா தமிழ்நாட்டு முதல் அமைச்சரையும் மதிக்கவில்லை. தமிழ்நாட்டையும் மதிக்கவில்லை. தீர்ப்பு வெளியாவதை ஒட்டி கர்நாடக தலைமை காவல் ஆணையரிடம் ஆலோசித்துள்ளார். ஆனால் தமிழக காவல் துறையிடம் ஆலோசிக்கவில்லை. கர்நாடகாவின் பாதுகாப்பில் அக்கறை எடுத்துக்கொண்ட நீதிபதி குன்கா தமிழ்நாட்டின் பாதுகாப்பை அலட்சியம் செய்துள்ளார். இதிலிருந்தே தெரியவில்லையா இவர் சுயநலவாதி என்று.
தமிழ்நாட்டு காவல் துறையிடம் பாதுகாப்பு பற்றி ஆலோசிக்காதது மிகப்பெரிய தவறு. தமிழ்நாட்டில் எவன் அடித்துக்கொண்டு செத்தால் எனக்கு என்ன? கர்நாடகா பாதுகாப்பாக இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் தானே நீதிபதி குன்கா செயல்பட்டிருக்கிறார்.
ஒருவரை குற்றவாளி என்று கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அவர் குற்றவாளி ஆக மாட்டார். அவருக்கு மேல் முறையீட்டு வாய்ப்புகள் உள்ளன. அங்கு அவர் நிரபராதியாகலாம். இது எல்லா கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியும். இந்த அடிப்படை வீதி கூட தெரியாமல் நீதிபதி குன்கா செயல்பட்டிருக்கிறார்.
நான் உங்களை குற்றவாளி என்று தீர்மானித்திருக்கிறேன் என்று நீதிபதி அறிவித்ததும். பின்னர் அது குறித்து குற்றவாளிகளின் இறுதி வாதத்தை கேட்க வேண்டும். இதை நீதிபதி குன்கா செய்ய தவறியிருக்கிறார். இதில் குன்காவின் கீழ்த்தரமான சர்வாதிகார குணம் வெளிப்பட்டிருக்கிறது.
நீங்கள் தற்போது ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சராக இருக்கிறீர்கள். உங்களை உடனடியாக சிறையில் அடைப்பதால் உங்களது கடமைகள் ஏதேனும் தடைபடுமா? அல்லது அவசர பணிகள் தடைபடுமா? என செயலலிதாவிடம் கேட்டிருக்க வேண்டும். & இதை செய்ய தவறியதன் மூலம் மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் என்ற பதவியை மதிப்பற்றதாக நினைத்திருக்கிறார் குன்கா.
செயலலிதா மீதான குற்றத்தை ஒரு கொடூர குற்றமாக சித்தரித்திருக்கிறார். இது மிகப்பெரிய உளவியல் தாக்குதல். இந்தியாவில் 100% பேர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருக்கிறார்கள். இதில் நீதிபதி குன்காவும் அடக்கம். இதை எந்த நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியும். இப்படிப்பட்ட தவறுகளை கொடூர குற்றமாக சித்தரித்ததன் மூலம் தன் பழிவாங்கும் போக்கை குன்கா செய்திருக்கிறார்.
குன்கா தான் இப்படி கீழ்த்தரமாக நடந்துகொண்டார் என்றால், கர்நாடக உயர்நீதிமன்றம் அவரை காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நீண்ட விடுமுறை காலத்தில் தீர்ப்பு அளித்தது மனித உரிமை மீறல் என நீதிபதி குன்கா மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதை முறியடிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் விடுமுறை காலத்தில் செயலலிதா மனுவை 2 நாள் விசாரிப்பது போல விசாரித்து நாடகமாடியுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.காலையில் அரசு வழக்கறிஞர் இல்லாமல் வாதத்தை கேட்க முடியாது என்று நீதிபதி மறுத்து விட்டார். மாலையில் நாளை விசாரிக்கப்படும் என பதிவாளர் அறிவிக்கிறார். அடுத்த நாள் காலை அரசு வழக்கறிஞரின் வாதத்தை மட்டும் கேட்டு நீதிபதி வழக்கை ஒத்தி வைக்கிறார். இதில் எங்கு நீதி உள்ளது என்று யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!
நீதிபதிகள் என்பவர்கள் சாவி கொடுத்த பொம்மைகளை போல செயல்படக்கூடாது. கொஞ்சம் பகுத்தாயும் திறமை நீதிபதிகளுக்கு வேண்டும். பொதுவாக மருத்துவர்கள் எவ்வளவு மேல்படிப்பு படித்துவிட்டாலும் இன்னும் பயிற்சி எடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம் என்பார்கள். அதே போல தான் வழக்கறிஞர்களும். வழக்கு, சட்டம் இவைகள் எல்லாம் நாள்தோறும் சூழலுக்கு சூழல் பகுத்தாயக்கூடியது. ஆனால் பல கான்வென்ட் நீதிபதிகள் செக்கு மாடுகளாகவே உள்ளார்கள். அதனால் தானே இந்திய குடியரசு தலைவருக்கே பிடிவாரண்ட் கொடுத்தார்கள்.
இப்படிப்பட்ட நிலைகள் மாற வேண்டும். குன்காவை போன்ற ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ நீதிபதிகள் திருந்த வேண்டும். அப்போது தான் இந்தியா வல்லரசாகும். இல்லாவிட்டால் அரசியலை விட நீதித்துறையில் தான் சாக்கடை நாற்றம் அதிகரிக்கும்.
பின்குறிப்பு : இந்த கட்டுரையில் தவறுகள் ஏதேனும் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அயோக்கியதை என்ற வார்தை மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தகுதியின்மை என்ற பொருளை குறிக்கிறது.
No comments:
Post a Comment