Sunday, December 4, 2016

இந்த சொற்ப தொகைக்காகவா மக்களுக்கு இவ்வளவு கஷ்டங்கள் என்ற கேள்விக்கணைகள்??????????

இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் இணையதளம், சற்று முன்பாக, ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆவணங்களை மேற்கோள் காட்டி, செல்லா நோட்டு அறிவிப்பு வெளியான நவம்பர் 8-ஆம் தேதி வரை, ரிசர்வ் வங்கியில் இருந்த கையிருப்பு தொகை 4.70 இலட்சம் கோடி ரூபாய் என்று போட்டுடைத்துள்ளது இந்தியன் எக்ஸ்ப்ரெஸ். நவம்பர் 27 வரை வங்கியில் மக்களால் டெபாசிட் செய்யப்பட்ட தொகை 8.5 இலட்சம் கோடி என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆக மொத்தம் சுமார் 13 இலட்சம் கோடி ரூபாய் தற்போது ரிசர்வ் வங்கி வசம் உள்ளது.
மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்த தகவல் படி, 500 1000 ரூபாய்களின் மொத்த மதிப்பு 15.44 இலட்சம் கோடி. அப்படியானால், மேற்கொண்டு வர வேண்டியது 2.5 இலட்சம் கோடி மட்டுமே. காலக்கெடு முடிய இன்னும் 30 நாட்கள் இருக்கும் நிலையில், குறைந்தபட்சம் இரண்டு இலட்சம் கோடியாவது வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்துவிட்டால், அரசுக்கு மிஞ்சப்போவது வெறும் 20-50 ஆயிரம் கோடி லாபம் மட்டுமே. கிட்டத்தட்ட எல்லா பணமும் வந்துவிட்டால் கறுப்பு பணம் எங்கே போனது? இந்த சொற்ப தொகைக்காகவா மக்களுக்கு இவ்வளவு கஷ்டங்கள் என்ற கேள்விக்கணைகள் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறப்போகும் தருணம் வெகு தொலைவில் இல்லை. இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் ஊடகமும், இது தொடர்பில், பெரும் அதிர்ச்சி ஒன்று அரசுக்கு காத்திருப்பதாகவே கூறுகின்றது.
3 முதல் 5 இலட்சம் கோடி வரை திரும்ப வராது, நாம் ஆதாயம் பார்க்கலாம் என்றிருந்த அரசின் எண்ணத்தில் பெரும் இடி இறங்கியிருப்பதின் பிரதிபலிப்பு தான் மத்திய அரசின் சமீபத்திய தடுமாற்றங்கள். நாளைவரை மட்டுமே ஐநூறு ரூபாய் செல்லும் என்று, தாங்கள் முன்னர் அறிவித்ததற்கு முரணாக செயல்படுவதும் இந்த தடுமாற்றத்தின் ஒரு பகுதி தான். என்ன நடக்க போகின்றது என்பது பொறுத்திருந்து பார்ப்போம். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...