இதுவரை வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் தொகைகள் எல்லாமே நம்மை போன்ற ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் பணம் மட்டுமே...
எந்த பணக்காரனுக்கு அரசியல்வாதியும் பெரிய அளவிலான வியாபாரியும் தன்னிடம் இருக்கும் கள்ளப்பணத்தை இளிச்சவாய்த்தனமாய் கொண்டு போய் வங்கிகளில் செலுத்தி மாட்டிக்கொள்ள விரும்ப மாட்டான்.... இவ்வளவு பணத்தையும் கெட்ட வழிகளில் சம்பாரிக்க தெரிந்த அவனுக்கு அதனை அதே வழியில் மாற்றிக்கொள்ள தெரியாதா...
இந்த திட்டத்தையும் இந்த திட்டத்தை முட்டாள்தனமாய் அறிவித்தவர்களையும் கண்மூடித்தனமாய் சப்போர்ட் செய்யும் அறிவாளிகளே.... உங்களிடம் ஒரு கேள்வி...
இதுவரை இந்தியாவின் எந்த வங்கியிலாவது மிகப்பெரிய தொகை ஏதாவது டெபாசிட் செய்யப்பட்டதாய் தகவல் வந்திருக்கிறதா... ?
நிச்சயமாய் வராது.... நம்மவர்கள் இந்நேரம் எவ்வளவு தெளிவாய் கொள்ளையடித்த பணத்தை எந்த எந்த வழிகளில் மாற்ற வேண்டுமே அந்ததந்த வழிகளில் மாற்றிக்கொண்டு தான் இருப்பார்கள்.. இந்த விஷயம் ஆள்வோர்க்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை... இது ஏதோ வேறு ஒன்றை திசை திருப்பும் முயற்சியாக மட்டுமே அறிய முடிகிறது...
கேனப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமை கதை தான் இது......
No comments:
Post a Comment