Friday, December 2, 2016

ஒரு மேஜிக் நடக்கிறது..



ஆச்சர்யங்களுக்கு மேலும் வலுசேர்ப்பதைப்போல தோனி திரைப்பட பாடல்வெளியீட்டுவிழாவில் நடிகர் நாசர் ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.
நாசர் தயாரித்து இயக்கி நடித்த அவதாரம் திரைப்படத்திற்கான பாடல்கள் மற்றும் பின்னனி இசை உருவான விதம் குறித்து கூறினார் நாசர். அவதாரம் திரைப்படத்தினை தொடங்குவதற்கு முன்பு ஒருநாள். இளையராஜாவிடம் ''சார் இதுமாதிரி கூத்துக்கலைஞர்கள் பத்தி ஒருபடம் பண்றேன்.. நீங்க இசையமைக்கணும்'' என்றதும் ''பார்ப்போம்'' என்று சொல்லி அனுப்பியிருக்கிறார் ராஜா. கிட்டத்தட்ட படத்தின் அத்தனை காட்சிகளையும் எடுத்துமுடித்துவிட்டு மீண்டும் இளையராஜாவை அணுகியபோது அவர் படத்தை பார்த்துவிட்டு ஓக்கேடா அருமையா இருக்கு நாளைக்கு ரெகார்டிங் என சொல்லியிருக்கிறார்.
கையில் பணமில்லாத நாசர் இப்படி திடீர்னு சொன்னா.. ஒருவாரம் கழிச்சி என மண்டையை சொரிய.. அவருடைய சிக்கலை புரிந்துகொண்டு தன் செலவிலேயே ரீரிகார்டிங்கிற்கும் பாடல் சேர்ப்புக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். அதோடு படத்தின் குறிப்பிட்ட ஒரு இடத்தினை சொல்லி இந்த இடத்தில் ஒரு பாட்டு வச்சா ரொம்ப நல்லாருக்கும்.. (படம் பார்த்த அரைமணிநேரத்தில்) ட்யூன் போட்டுட்டேன் கேக்கறீயா என சொல்லி.. தன்னுடைய ஹார்மோனியத்தில் ''தந்தனனா தான னான தான னான நா!'' என கட்டைகுரலில் சுரத்தே இல்லாமல் பாட.. நாசருக்கு கிலியாகிவிட்டது.
பாட்டு ரொம்ப மொக்கையா இருக்கும்போலருக்கே.. என நினைத்தவர்.. இளையராஜாவிடம் எப்படி இதை சொல்வது என்பது புரியாமல் அப்படியே நின்றிருக்கிறார். சரி நாசர் நீ நாளைக்கு காலைல வா வேலைய தொடங்கிருவோம்.. என திருப்பி அனுப்பியுள்ளார்.
அடுத்த நாள் அந்த ட்யூன் ரொம்ப மொக்கையா இருக்கு.. வேற போட சொல்லணும், இன்னைக்கு ட்யூன் டிஸ்கசன்ல அவரை ஒரு ஆட்டு ஆட்டிடணும் என்கிற வெறியோடு இளையராஜாவின் வீட்டுக்கு போகிறார் நாசர். இளையராஜா தன் வீட்டில் தனிமையில் அமர்ந்திருக்க நாசர் உள்ளே நுழைகிறார். உட்காருங்க என்று சொல்லிவிட்டு ஒரு சாக்லேட்டை அவருக்கு கொடுத்துவிட்டு மீண்டும் எதையோ எழுத ஆரம்பிக்கிறார் இளையராஜா.. ஸ்ரீராமஜெயம் எழுதுவது போல வேக வேகமாக இசைக்குறிப்புகளை எழுதிக்கொண்டேயிருக்க.. அரைமணிநேரம் ஒருமணிநேரமாகிவிட்டது. நாசர் பொறுமையிழந்து திட்டிவிடலாம் என்று நினைக்கும்போது.. சரிவாங்க ரெகார்டிங் போவோம்.. என்று சொல்ல நாசருக்கு ஒன்றுமே புரியல..
ரெகார்டிங் ரூமில் எல்லாமே தயார். பாடகர்கள் வந்திருக்கின்றனர்.. இசைக்கலைஞர்கள் காத்திருக்கின்றனர். நாசர் அந்த ட்யூன் வேண்டாம் என்று சொல்ல நினைத்துக்கொண்டிருக்க.. ஒரு மேஜிக் நடக்கிறது.. இளையராஜா இசைக்கலைஞர்களை பார்த்து தன் கைகளை தூக்கி இறக்க.. தானத்தந்த தானத்தந்தா.. தானத்தந்த தானத்தந்தா.. அந்த இசை..... எங்கும் நிறைய நாசர் அப்படியே சிலிர்த்துப்போய் அந்த இடத்திலேயே ஸ்தம்பித்து நின்றாராம்! அதே நாளில் மொத்தபடத்திற்குமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை அனைத்தையும் செய்துமுடித்து அசத்தினாராம் ராஜா!....!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...