Saturday, December 3, 2016

நாம் விரும்பும் நல்வாழ்வுப் பழக்கத்தை அமைத்துக் கொள்வதற்கு ஐந்து விதிகள் இருக்கின்றன.

1. ஒரு புதிய வழக்கத்தைக் கைக்கொள்ளத் தொடங்கும் போது,
நம் பேச்சிலே உற்சாகமிருக்க வேண்டும்.
உயிர் இருக்க வேண்டும்.
நாம் நினைப்பதை உணர வேண்டும்.
அறிவாகிய தெளிந்த நீரோடை பெருகிப் பாய்ந்து வருவது போன்ற ஆழமான பழக்கத்தையே மேற்கொள்ள வேண்டும்.
2. கண்மூடிப் பழக்கத்திலே கருத்தைச் செலுத்த வேண்டாம்.
அது மண்மூடிப் போகட்டும்.
அது தடம் மறைந்து போகட்டும்.
பண்பு நிறைந்த பழக்கத்திலேயே மனம் பதிந்து விட வேண்டும்.
அப்புறம்,
வேறு வீணானப் பழக்கம் தலைகாட்டாது.
3. அடிக்கடி நல்வாழ்வுப் பழக்கத்தை
நழுவ விடாமல்
அதையே உறுதியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
ஏதோ தற்செயலால்,
அப்படிப்பட்டப் பழக்கம் வாய்த்துவிடும் என்று நினைக்கவே கூடாது.
4. தொடக்கம் முதலே,
அந்தப் பழகிப் போன பாதையில் தான் அடி எடுத்து வைப்பது என்று அழுத்தமாக இருக்க வேண்டும்.
முதலில் சிக்கலாகத்தான் இருக்கும்.
உறுதி,
விடாப்பிடி,
ஒரு மனப்படும் வலிமை,
ஆகியவற்றை ஒருங்கே பயன்படுத்தினால் பழக்கம் நிலைத்து விடும்.
5. அய்யமும் அச்சமுமின்றி,
★மேழி ★ பிடித்தவன் திரும்பிப் பாராமல் முன்னே செலுத்திக் கொண்டு போவது போல,
பழக்கப்பட்ட பாதையிலேயே வெற்றி நடை போட்டு முன்னேறும் துணிவு வேண்டும்.
இப்படிப்பட்ட பண்பு நிறைந்த பழக்கத்தோடு பக்குவமான சூழ்நிலையும் வேண்டும்.
இந்தச் சூழ்நிலை என்பது,
நாம் படிக்கும் அறிவு நூல்கள்,
நாம் பழகும் மனிதர்கள்,
நாம் வாழும் சமூகம்,
நாம் பார்க்கும் வேலையின் தன்மை,
நாம் வாழும் நாட்டின் தட்பவெப்பம்,
நாம் உடுத்தும் உடை,
நாம் உண்ணும் உணவு,
நாம் விரும்பும் இசை,
எல்லாவற்றுக்கும் மேலாக,
இளமையிலேயே நாம் பெறும் அறிவுப் பயிற்சி ஆகியவற்றைப் பொறுத்ததாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...